Header Ads



ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச நிறுவனங்களை திறப்பது குறித்த அறிவுறுத்தல்

ஏப்ரல், 22 புதன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் 22 புதன் முதல் ஒன்றுகூடி தமது நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும்.

ஏப்ரல் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் தமது பிரதித் தலைவர்கள் உட்பட ஏனைய முக்கிய அதிகாரிகளை ஒன்றுகூட்டி அந்தந்த நிறுவனங்களின் சேவைக்கு அழைக்கப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை, அழைக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் ஆகியவற்றை தீர்மானிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்திட்டமொன்றை தயாரித்து 27 திங்கள் முதல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

திட்டம் பற்றி ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்குமாறும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மொஹான் சமரநாயக்க
பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.04.19

No comments

Powered by Blogger.