Header Ads



பயங்கரவாதம், கடும்போக்குவாதத்திலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவர் - ஜனாதிபதி தலைமையில் தேசியப் பாதுகாப்புக்கே முன்னுரிமை


ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு ஓரு ஆண்டு பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்கொலைத் தாக்குலை திட்டமிட்டவர்கள், நிதியீட்டம் செய்தவர்கள் மற்றும் உதவியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தண்டனை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்படையவர்கள் எவ்வளவு பெரிய சமூக அந்தஸ்ததை கொண்டிருந்தாலும், எவ்வாறான அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தாலும் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் தேசியப் பாதுகாப்பிற்கு பூரண முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், பயங்கரவாதம் மற்றும் கடும்போக்குவாதத்திலிருந்து நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவர் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறான துரதிஸ்டவசமான சம்பவங்களினால் மக்கள் உயிரிழப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடும்போக்குவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.