April 02, 2020

சித்திரம் கீற வேண்டுமாயின், சுவர் இருக்க வேண்டும்..

கொவிட் 19 இனால் இது வரை சர்வதேச ரீதியாக 9 இலட்சத்து 81ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 50ஆயிரத்து 248 பேர் உயிரிழந்துள்ளார்கள் (2020.04.02. 09 04 PM) இலங்கையிலும் 04 வது உயிரிழப்பு தற்போது (09:04 PM) பதிவாகிள்ளது. 

உலகமயமாக்கள் இன்று வீட்டு மயமாக்கப்பட்டு சர்வதேச மனித சமூகம் இன்று வீடுகளுக்கு முடக்கப்பட்டுக் கிடக்கின்றது. அரச தனியார் நிறுவனங்கள் மட்டுமன்றி சகல சமய வழிபாட்டுத்தலங்கள் கூட பூட்டுப்போடப்பட்டுள்ளது. 

பள்ளி வாயல்கள் மூடப்பட்டு ஜமாத் தொழுகைகள் கிடையாது, ஜுமுஆத் தொழுகைகள் கிடையாது, உம்றாவுக்கு செல்ல முடியாது. இதற்கும் மேலாக இலங்கையிலுள்ள முஸ்லிம்களில் இந்நோயினால் அல்லது இந்நோய் என்ற சந்தேகத்தில் இறந்தால் அந்த உடல் எரிக்கப்படுகின்றது. அதனை அரசு சுற்றுநிருபனம் வெளியிட்டு சட்டமாக்கியிருக்கின்றது.

இதற்கிடையில் இனவாதத் தீயையும் ஊடகங்கள் பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆக மொத்தத்தில் கொவிட 19 என்றால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில்
நம்மில் சிலர் அரச மற்றும் சுகாதாரத் துறையினரின் வழிகாட்டல்களைக் கண்டு கொள்ளாமல் வழமை போன்று தங்களது செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இக் கொவிட் 19 ஐ ஓரளவு கட்டுப் படுத்த வேண்டுமானால் குறைந்தது 80-90% மான சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் எம்மில் பலர் இன்று அரசாங்கத்தின் அறிவுறுத்தல் சலுகைகளுக்கு மாற்றமாக தங்களது உழைப்பினை/ தொழிலினை மட்டுமே மையமாக வைத்து செயற்படுகின்றார்கள். 

இவர்களுக்கு மேற்சொன்ன தரவுகளும் தகவல்களும் வெறும் செய்தியே தவிர அவர்களது வீடுகளில் நடைபெறாத வரை அவர்கள் உணரப்போவதில்லை.

 சிந்திக்க வேண்டிய தருணமிது

இது வரை எரிக்கப்பட்டுள்ள இரண்டு ஜனாஸாக்களும் "உங்களது தந்தை/சகோதரனாக இருந்தால் உங்களது மனநிலை எப்படி இருக்கும்?

இதே நிலை உங்களுக்கோ/ உங்கள் சார்ந்தோருக்கோ நாளை ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

உங்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டால் மட்டுமல்ல நோய் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்டால் கூட " உங்களை யாரும் நெருங்க மாட்டார்கள், பெத்த பிள்ளையை உங்களால் அள்ளி அணைத்தை தூக்க முடியாது, கட்டிய மனைவின் அருகில் கூட நிற்க முடியாது, வீட்டுக்குள் வைத்தே நீங்கள் சிறைப்பிடிக்கப்படுவீர்கள், உங்கள் வீடுகளிலில் நீங்கள் நோயாளி/ நோய்க்காவி என்று முத்திரைகுத்தி பத்திரிகை ஒட்டுவிடுவார்கள்.

இறைவன் பாதுகாக்க வேண்டும் மரணம் ஏற்பட்டு விட்டால் அனைவரும் இருந்தும் யாருமே இல்லாத அநாதைப் பிணம் போல் எரித்து விடுவார்கள்.....

இது விளையாடும் தருணமல்ல... நமக்கான பாதுகாப்பை நாம்தான் தேடிக் கொள்ள வேண்டும்.

உழைப்பது குடும்பம் சகிதம் நோய் நொடியற்று மகிழ்ச்சியாய் உயிர் வாழத்தான். உயிரோடும் தேக ஆரோக்கியத்துடனும் நாம் நலமாக இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் உழைத்துக் கொள்ளலாம் ஆனால் கொவிட் 19 தொற்றி விட்டால்????

சித்திரம் கீற வேண்டுமாயின் சுவர் இருக்க வேண்டும்.....

உழைப்பதற்கு உயிரும் உடல் ஆரோக்கியமும் இருக்க வேண்டும்....

சிந்தியுங்கள் உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்....

அத்திவசயத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறிவிடாதீர்கள் வெளியேறினாலும் உங்கள் பாதுகாப்பில் நீங்கள் கவனமாக இருங்கள்.

குறிப்பு: இப்பதிவானது சரியான பாதுகாப்பின்றி கடமை புரியும் சுகாதாரத்துறை, பாதுகாப்புத் துறை ஊழியர்கள், வியாவாரிகள், அத்தியவசியத் தேவையின்றி கடமை புரியும் / கடமையில் ஈடுபடுத்தப்படும் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் கவனத்திற்கு/ சிந்தனைக்கு....

 ஜெமீல் எம் சஜா (கபூரி)

4 கருத்துரைகள்:

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

எம்மில் எம்மில் எம்மில், நாம் நாம் நாம் என்று ஏன் அள்ளி அள்ளி தலையில் போட்டுக் கொள்றீங்க??? நாடு முழுக்க எல்லாரும் எல்லாம் செய்ய நீங்க மட்டும் முந்திக்கொண்டு கோம்ப சுமக்கிரீங்க என்ன கொந்துறாதா???

Post a Comment