Header Ads



அரசாங்கத்திற்கு ரணில் வழங்கவுள்ள திட்டம்


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாரிய சவால்களிலிருந்து மீள்வதற்கான பொருளாதார திட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாரித்துள்ளார்.

இதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவும் எதிர்பார்த்துள்ளதுடன் அதற்கு முன்னர் குறித்த  திட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்க உள்ளார்.

கொவிட்19 வைரஸ் தொற்றுக் காரணமாக தேசிய பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை சீர் செய்யும் வகையிலான யோசனை திட்டமொன்றே தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா ஒழிப்பிற்கான நிதி பயன்பாடு மற்றும் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் முறைமை குறித்தும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இது .

எனவே கொவிட்19 வைரஸ் ஒழிப்பு திட்டத்தை வெற்றிக்கரமாக முன்னெடுத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெற செய்ய அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமென்று தெரிவித்துள்ளார்.

(எம்.மனோசித்ரா)

5 comments:

  1. Your economy system failed last5years.also your the oneAttacked kandy digana and negombo kurunegala attacks .So no body beleive you

    ReplyDelete
  2. நண்பனுடன் சேர்ந்து பொருளாதாரத்திட்டம் அமைத்து வெற்றிகரமாக மத்திய வங்கியையும், அரச தனியார் பணி செய்யும் சாதாரண மக்களின் இ.பி.எப் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு நண்பனை வெற்றிகரமாக காப்பாற்றி சிங்கப்பூர் அனுப்பிவிட்டு நாட்டின் கோடான கோடி பணத்தை விழுங்கி ஏப்பமிட்ட பொருளாதாரத் திட்டத்துக்கு சமாந்திரமாக மற்ற அதிகாரத்தில் இருக்கும் நண்பருடன் சரியாக மங்கொள்ளையடிக்கும் குட்டிச் சுவரான பொருளாதாரத்திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறாரா? இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சாதி மத,இனம் பாராது அத்தனை மக்களும் சேர்ந்து இவனை 1000 வருடங்கள் சிறையிலடைக்குமாறு வேண்டினாலும் அவருடைய நண்பர் இவனைச் சிறையில் போடமாட்டார் என்பது மட்டும் உண்மை. இனி எம் அனைவரையும் படைத்த ரப்பிடம் தான் இந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொள்ளைக்காரன்களுக்கு தண்டனை வழங்குமாறு நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது தவிர வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  3. The JOKER is popping up again. H. E. Gotabya Rajapakshe is a different person. This joker's rubbish ideas will be thrown in to the dust bin

    ReplyDelete
  4. You are a waste fellow. They dont need your plan

    ReplyDelete

Powered by Blogger.