Header Ads



இலங்கை வெளிவிவகார, அமைச்சரின் கவனத்திற்கு

காலா காலமாக வெளிநாட்டில் வேலை செய்கின்ற மக்களால்  வெளி நாட்டுச் செலாவணியை பெற்றுத் தருகின்ற உறவுகளுக்கு...

அது தருவோம், இதைச் செய்வோம் என்று முன்பு எம்மை ஏமாற்றிய கதைகளையே இன்றும் அரசாங்கம் தொடர்வதைக் காணமுடிகின்றதே..

அன்றி இதுவரை வெளிநாட்டில் வேலை செய்கின்றவர்களுக்கு உருப்படியான எந்த நல்ல விடயங்களும் செய்வதாக இல்லை.

வெளிநாட்டில் பணிபுரிகின்ற உறவுகளை ஏமாற்றுவதற்காக பெயரளவில் மிக சிலருக்கு ஓரிரண்டு லொத்தர் முறையில் பணப்பொதிகள் கிடைத்ததாக அறிகின்றோம். வேறும் சிலருக்கு புலமைபரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவோம்.

இது அனைத்து உறவுகளுக்கும் பொதுவாக வழங்கப்படுகின்ற சலுகை அல்ல.

அரசாங்கம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்ற அத்தனை உறவுகளுக்கும் பொதுவாக எந்த தராதரமும் பாராது ஒரு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அதன் முதல் கட்டமாக இன்றைய இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு உதவிகளை செய்தல் வேண்டும்.

இன்று உலகில்... 

தமது உயிருக்கே ஆபத்து வந்திடும் என்ற பெரும் அச்சத்தில் இருக்கும் எமது உறவுகள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் குறிப்பாக இத்தாலியில் வாழ்கின்ற எமது உறவுகள் தமது தாய் நாட்டுக்குச் செல்ல விமான நிலையம் சென்ற போது உறவுகள் Flight cancelled. தாயகம் போக முடியாது என்று குணம்பிப் போயுள்ளவர்களின்  நிலையை காணமுடிந்தது.

அங்கு அந்த உறவுகள் தமது சிறு குழந்தைகளுடன் மிகவும் பரிதாபமாக இருந்த காட்சி மிகவும் எம்  மனதை உறுத்துகின்றது.

மேலும் குவைட் நாட்டில் சட்ட விரோதமாக இருந்தவர்களை அந்த அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் அங்கு சென்று பணிபுரியும் விதத்தில் சகல வசதிகளையும் டிக்கட் உட்பட கொடுத்தும், எமது அரசாங்கம் அவர்களை ஏற்பதற்க்கு தயாராக இல்லையாம்...!!? அவர்களை இந்த சூழ்நிலையில் அனுப்ப வேண்டாமாம்...!!! என்ற செய்தி மக்களை சிந்திக்க செய்கின்றது.
இதுதான் எமது நாட்டின் வேண்டுதலா...???? என்று மக்கள் பேசிக்கொள்வதை அறியவும் கேட்கவும் முடிகின்றது.

இவ்வாரான செயல்கள் வெளிநாடுகளில் வாழ்கின்ற குறிப்பாக மத்திய கிழக்கில் பணிபுரிகின்ற அத்தனை உள்ளங்களையும்  வேதனைக்குள்ளாக்கியிருக்கின்றது.

எமது நாட்டுக்கு பெரும் வருமானத்தை மட்டும் வழங்கிக் கொண்டுருக்கும் இலங்கை வாழ்  புழம் பெயர் உறவுகளே..!

இன்று இந்தக் கொரோனா வைரஸினால் அனைத்து நாடுகளிலும் உள்ள எமது இலங்கை உறவுகளுக்கு இந்த இக்கட்டான சூழலிலும் கூட அரசாங்கம் எமது குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்ட முன்வருவதாக எந்த நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாக அறியமுடியவில்லை.

ஆனால்,சமுர்த்தி ஊதியம் கொடுப்பவர்களுக்கே சமுர்த்தி திட்டம் மீண்டும் மீண்டும் வழங்கப்படுவதே அன்றி வெளிநாடுகளில் தொழில் செய்து வாழ்ந்து கொண்டு தமது தாய் தகப்பன் மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவுகளை பிரிந்து மிகவும் சோகத்தில் இருக்கின்ற எமது குடுப்பத்தினருக்கு எந்த நிவாரணங்களையும் வழங்க இந்த அரசு எந்த திட்டங்களையும் மேற்கொண்டதாக இது வரை தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குறிய விடயமாகும்.

மேலும் சில அற்ப சொற்ப அரசியல் நோக்கங்களை முன் கொண்டு செயல்படும் பலர்  அரசாங்கத்தால் இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் உதவிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களுக்கு ஏனைய நாடுகளில் ஏராளமான அரச சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

எமது நாட்டில்..

வெளிநாட்டில் வேலை செய்கின்ற ஒருவனிடம் தான் அனைத்தையும் கழட்டிக் கொண்டு வெறும் கையோடு அனுப்புகின்றது.

நாம் வெளிநாட்டுக்கு வருகின்ற பொழுது,

வெளிநாட்டு காப்புறுதி செய்து கொண்டு வருகின்றோம். அதன் பலன் தான் என்ன...!?

வாகனம் ஒன்றை Insurance செய்கின்றதில் அதன் பலன் கிடைக்கின்றது.

ஆனால் இந்த வெளிநாடு செல்லும் நபருக்கு செய்யும் காப்புறுதியின் பலனை இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டாவது வெளிநாட்டு தொழில் வாய்ப்பு  அமைச்சியினால் தேவையான சேவைகளை மேற்கொள்ள முடியாதா..!?

Wafa

4 comments:

  1. ஏன் சார் உள் நாட்டில் எத்தனை பேர் தின்டாடுகிறார்கள்.நீங்கள் மாத முடிவில் கை நிறைய சம்பளம் வாங்குகிறீர்கள்.இது நியாயமா?

    ReplyDelete
  2. IT is realy very sad to hear this from people who earn foreign currency to Srilanka.

    At the airport in Srilanka they chase us to check our passport for insurance payment... .

    Even when 1st time a poor citizen go out for earning for family with lots of difficulties ... they block their journey sometimes for this insurance issue, BUT when these employee fall in to any bad situation ... they act like these... highly unacceptable and inhuman.

    Also, when a Srilanka family working out side the country ... their kids are treated as forieng student in getting entrance to a local university. They are charged 100s of thousand of US Dollars to get entrance to government Universities in country.

    Shame on government and foreign ministry and insurance system... we send millions of forieng currency and support Srilanka's economy ... but our well qualified kids are prevented from free education at government universities in srilanka.

    Hope current president will look in to the problems of srilankans who work abroad to support the economy of the country by bring money back to the mother land.

    Also consider free entrance to qualified kids of such worker, who completed A/L outside to continue university studies with the same treatment as a Srilankan Local A/L student.

    We Trust in GOD alone .. but this is our demand as our right as a Citizen.

    ReplyDelete
  3. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பாராளமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எல்லா சலுகைகளும் வழங்கப்படணும் முக்கியமாக இறக்குமதி வரிச் சலுகை

    ReplyDelete
  4. இதை சிங்களத்தில் மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும்.நன்றி வபா கட்டாரில் இருந்து.

    ReplyDelete

Powered by Blogger.