April 25, 2020

"முஸ்லிம்கள் முன்மாதிரியாக நடப்பவர்கள், வீண் சண்டைக்கும் வம்புக்கும் செல்லாதவர்கள்" என்ற மனோபாவம், அனைவரினது உள்ளங்களிலும் வருமளவு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்

( ஐ. ஏ. காதிர் கான் ) 

   இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து  முஸ்லிம்களுக்கும் புனித ரமழான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, "முஸ்லிம்கள் எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடப்பவர்கள். முஸ்லிம்கள் வீண் சண்டைக்கும் வம்புக்கும் செல்லாதவர்கள்" என்ற மனோபாவம், அனைவரினது உள்ளங்களிலும் வருமளவுக்கு, இப்புனித ரமழானில் கண்ணியமாகவும், நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த ரமழான் வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.

    அந்த ரமழான் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.  

   புனித ரமழான்,  கண்ணியமிக்க மகத்துவமிக்க மாதம். இந்த மாதத்தில் குறிப்பாக, கொழும்பு வாழ் மக்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் நிறையவே உள்ளன.  கொரோனா தொற்றின்  காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில், இதில் கொழும்பு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, நாம் பொடுபோக்காக  நடந்து கொள்ளக் கூடாது. எந்தத் தீர்மானங்களையும் அவசரமாக எடுத்துவிடவும்  கூடாது. "லொக்டவுன்" செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களும் கூட மிக அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே செல்லக்கூடாது. கட்டுப்பாடுகளைப் பேணி,  விட்டுக்கொடுப்பு, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அரச, பாதுகாப்பு, சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய நாம் எம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். 

   விசேடமாக, ரமழான் காலங்களில் இரவு வேளைகளில் இளைஞர்கள், சிறுவர்கள் எந்தவித வீண் விளையாட்டுக்களிலும் ஈடுபடாமல் இருப்பது, நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழி முறையாகும். இயன்றவரை, தனிமையாகவே இருந்து கொள்வதே எமக்கும் அடுத்தவர்களுக்கும் மிக்க நல்லது.

   இதேவேளை, கொரோனா தொற்றினால் எமக்கு ஐந்தாவது தடவையாகவும்  வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை  தவறிப்போய்விட்டது. பள்ளிவாசல்கள் யாவும் ஐவேளைத் தொழுகைக்காக மூடப்பட்டுள்ளன. பிள்ளைகளின் பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளன. 

   இந்நிலையில், இப்புனித ரமழானில் ஜும்ஆத் தொழுகையை மீண்டும் தருமாறும், பள்ளிவாசல்களைத் திறந்து தருமாறும், பாடசாலைகளை ஆரம்பித்துத் தருமாறும், வல்லவன் இறைவனிடம் துஆப் பிரார்த்திப்போமாக.

    அத்துடன், ரமழானில் தவறாமல் செய்ய வேண்டிய  அமல்களிலும் நாம் கண்ணுங்கருத்துமாக இருந்துகொள்ள வேண்டும். 

   வீண் பேச்சுகள், தேவையில்லாத  தர்க்கங்கள்  போன்றவற்றை இயன்றளவு தவிர்த்து, அதிகமான நேரங்களில், உடல் சோர்வாக உள்ள நேரங்களில் தஸ்பீஹ் மற்றும் இஸ்திஃபார் செய்து கொள்ள வேண்டும்.

    இன்றைய அசாதாரண சூழ்நிலையில், இயன்ற வரை குடும்பத்துடன் நோன்பு திறப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.    குறிப்பாக, ஆண்கள் இந்த கண்ணியமான மாதத்தில் தனது அலுவல்களை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் நோன்பு திறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். 

    நோன்பு திறக்கும் நேரம் மிகவும் பெறுமதியான நேரம் என்பதால், அந்த கண்ணியமான நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். 

   உலக மனிதர்கள் அனைவரையும் எங்களுடைய துஆக்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக,  கொரானா தொற்றினால் இன்னல் துன்பங்களில் துவண்டு கொண்டிருப்பவர்கள் அத்துடன்,  உடல் நலமின்மையால் அவதிப்படுபவர்கள், கடன் துன்பங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், திருமணமாகாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆண், பெண் பிள்ளைகள் உட்பட அனைவருக்காகவும், நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு  வாழவும், நலமும் வளமும் பெறவும் துஆச் செய்ய வேண்டும்.

   அத்துடன், கொரோனா தொற்று நம் நாட்டிலிருந்து விரைவில் நீங்கவும், இந்த பேராபத்திலிருந்து அனைவரும் விடுபடவும் நாம் கையேந்திப்  பிரார்த்திக்க வேண்டும்.

   எல்லாம் வல்ல இறைவன், புனிதமான இந்த ரமழானில் நம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து, நம்முடைய அனைத்து அமல்களையும் ஏற்றுக் கொண்டு இவ்வுலகிலும், மறுமையிலும் நம்முடைய வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும்,  சந்தோஷத்தையும் வழங்கி அருள்பாளிப்பானாக ! இயன்றவரை தனிமையாக இருப்போம் ! கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வோம் !!


1 கருத்துரைகள்:

Salaams,
Brother Faizer Musthapa,
It is pleasant to read your above message to the Muslims in the begining of the Holy month of Ramadan 2020. Your message outlines many important guidances that are reflected in the teachings of Islam, but the very fact is that you politicians only preach to others, but do not practice same. You are also not ever willing to change your life style and become good practicing Muslims, for that matter Muslim politicians and so-called muslim leaders, Insha Allah. "The Muslim Voice" feels that you should begin to preach all what you have told a journalist - Brother. I.A.Kadir Khan "TO YOUR OWN" self first and pray God AllMighty Allah to bring about changes in your life so that you can lead the correct "ISLAMIC WAY OF LIFE", Insha Allah.
The Reality is the following:
The Sri Lanka Muslim Community POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY? Why God AllMighty Allah is testing us in this period? Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).
We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.
We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
Our dealings are NOT CLEAN with other Communities.
We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.
WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
"The Muslim Voice" appeals to your therefore, that if you are one of those politicians/muslim who has lived a life of even any one (01) of the above mentioned thoughts and practices, THAT YOU SHOULD PRAY GOD ALLMIGHTY ALLAH DURING THIS HOLY MONTH OF RAMADAN AND THIS CHALLENGING PERIOD OF "COVID19" to be "FREED" of such action/activities and make you a better person to lead the "TRUE ISLAMIC/MUSLIM WAY OF LIFE" usefull to your family and the Muslim community at large, after the Holy month of Ramadan, Insha Allah.
Ramadan mubarak.
Noor Nizam - Convener "The Muslim Voice".
(Note: These comments are NOT made as MALICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).

Post a comment