April 22, 2020

முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்ட முடியாது - கருணா

- பாறுக் ஷிஹான் -

 முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்த வேளை  அம்பாறை மாவட்டம்   கல்முனையில் அமைந்துள்ள  புதன்கிழமை(22) மதியம் தனது  கட்சி ஆதரவாளர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது  அவசியமாகும்.இதில்  நாங்கள் விசாரித்து தீர்ப்பு வரும்வரை  எவரையும் குற்றம் சாட்ட முடியாது.அத்துடன் புலனாய்வு துறையினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையின் அடிப்படையில் இத்தாக்குதல் சம்பந்தமாக  தொடர்பு பட்டவர்கள்   கைது செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இதில் வீணாக  ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக நாங்கள்   எங்கள் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை குற்றஞ்சாட்டுவது முறையல்ல. அவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

துரிதமாக  இந்த விசாரணைகளை மேற்கொண்டு முஸ்லிம் மக்கள் இடத்தில் இருக்கின்ற  ஐக்கியத்தை நாம் உருவாக்க வேண்டும்.  மீண்டும் உறவை அம்மக்களுடன்  சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன் கடந்த கால அரசாங்கங்கள்  உரிய பாதுகாப்பினை மேற்கொள்ளாமை காரணமாகத் தான்    இந்த  வலிந்த தாக்குதல் நடப்பற்கு காரணமாக அமைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள் 

இதனால்  பல   மக்களின்  உயிர்கள்  இழக்கப்பட்டு  ஒரு அமைதியற்ற  சூழலில் வாழும் நிலையில் அனைவருக்கும்  இந்த தாக்குதலால் ஏற்பட்டது.
ஆகவே உறவை இழந்த  சொந்த பந்தங்கள் உறவுகள் அனைவருக்கும் இடத்தில் நாங்கள் ஒரு ஆறுதல் கூறி   அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக  பிரார்த்திக்கின்றோம் என கூறினார்.

7 கருத்துரைகள்:

Ahhhaaaa terrorist no-2 idiot

கடந்த கால கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள் மனதில் மாறாத வடுக்களை ஏறபடுத்தியுள்ளதை எல்லோரும் அறிவர். தமிழ் மக்கள் கூட அந்தபபடுகொலை நியாயப் படுத்தவில்லை.மாறாக கவலைப்பட்டார்கள். நாம்கூட அப்பாவித்தமிழ் மக்கள் பெண்கள் சிறார்கள் அனியாயமாக கொல்லப்பட்டபோது மற்றும் இறுதிப்போர் அவலத்திலும் அவர்கள் பட்டதுயருக்காக கண்கலங்கினோம். யாரோ மூட்டும் நெருப்பில் ஒன்றுமறியா ஜீவன்கள் கருகுவது கொடுமையிலும் கொடுமை.
மனச்சாட்சியுடன் சிந்திப்போம்.சிந்தனைகள் கொள்கைகள் அதன் செயல்பாடுகள் கால நகர்வில் மாறும்போது விசித்திரமான எண்ணங்கள் முடிவுகள் வெளிப்படும்.

இதேன்ன புதுசா கிடக்கு....

புலி பதுங்குது எதையோ பெரியதாய் வேட்டையாடத்தான்.அண்ணா புலியையே பிடித்து கொடுத்த புலிநரி.

இவர் முஸ்லிம்களுக்கு சார்பாக பேச வில்லை. மாறாக இத்தாகுதல் முஸ்லிம்களால் திட்டமிட்டு செய்யப்பட்டதே என்று நிரூபிக்க முனைகிறார். இந்த தாக்குதல் அதிகாரவர்க்கத்தினால் கச்சிதமாக திட்டமிட்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உண்மை நிச்சயமாக ஒரு நாள் வெளியே வரும்.

உன்னை போன்ற பயங்கரவாதிகளிடம் இருந்து இந்த சஹ்ரான் போன்ற காவாலிகள் எடுத்துக் கொண்ட அனுபவமே இவ்வாறான கீழ்த்தரமான நிலைமைகளுக்கு முழுக் காரணம்.

நீ கடந்த காலங்களில் இந்த நாட்டில் செய்த படுகொலைகளுக்காக உனக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படல் வேண்டும்

Post a Comment