Header Ads



நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் அவலம்

இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் போது எடுத்தது. அங்கே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பு உடையில் இருக்கும் பணியாளர்கள் அந்த சவப்பெட்டிகளைப் புதைக்க ஒரு பெரிய குழியைத் தோண்டுகின்றனர்.

இது நியூயார்க் நகரத்தின் ஹார்ட் தீவு ஆகும். இது இறுதிச் சடங்கு செய்ய முடியாதவர்கள், யாருமே இல்லாதவர்கள் போன்றவர்களைப் புதைக்கும் இடமாகும்.

நியூயார்க் நகரத்தில் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளை விட இந்த நகரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்த ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினை விட, நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

வியாழக்கிழமை அன்று 10000 பேர் புதிதாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,59,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் ஸ்பெயினில் 1,53,000 பேரும், இத்தாலியில் 1,43,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க்கில் இதுவரை 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் நியூயார்க்கில் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது.

 இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் போது எடுத்ததுReuters
150க்கும் மேற்பட்ட வருடத்திற்கு முன்பிலிருந்து அதிகாரிகள், உறவினர்கள் யாரும் அற்றவர்கள் மற்றும் இறுதிச் சடங்கு செய்ய வசதியில்லாதவர்களின் சடலங்களை புதைக்க பயன்படுத்தும் ஹார்ட் தீவிலிருந்து ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டது இந்த காணொளி.

இங்கே இருக்கும் பல சடலங்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்கள்.

வாரத்தின் முதல் நாளிலிருந்து ஐந்தாம் நாள் வரையில் இறந்தவர்களின் சடலங்களே புதைக்கும் இடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் தண்டனை நிறைவேற்றும் துறை கூறியுள்ளது.

2 comments:

  1. இந்த வீடியோ மற்றும் படங்கள் எல்லாம் இலங்கை துவேஷ அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டும் ஏனேனில் அவர்கள் சிறுபான்மையினரின் உரிமையை அவமதிப்பை செய்து பொய் தகவலை கொடுத்து ஏமாற்றினார்கள்,உலகில் அமெரிக்காவையும் விட அதிசயமான விஞ்ஞானிகள் எங்கள் நாட்டில் தான் இருக்கிறார்கள் என்ற நினைப்பு.

    ReplyDelete
  2. அமெரிக்காவிலேயே புதைக்கிறார்கள்

    ReplyDelete

Powered by Blogger.