Header Ads



ஊரடங்கு தொடர்பான, முக்கிய அறிவிப்பு

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கொழும்பு, கம்பஹா,களுத்துறை ,புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனையப் பகுதிகளில் நாளை செவ்வாய்கிழமை தளர்த்தப்படவுள்ளது.

அதற்கமைய நாளை அதிகாலை 5 மணிக்கு தளத்தப்படும் ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள காலங்களில் ,அத்தியாவசிய தேவை மற்றும் தொழில் நிலையங்களுக்கு செல்பவர்களைத் தவிர ஏனையவர்கள் தங்களது அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரமே பயணிக்க முடியும்.

அதற்கமைய திங்கட்கிழமை 1,2 என்ற இறுதி இலக்கம் அமையப் பெற்றவர்களுக்கும் , செவ்வாய்கிழமை 3 அல்லது 4 என்ற இலக்கத்தை கொண்வடர்களும் புதன்கிழமை 5 அல்லது 6 என்ற இலக்கத்தினரும் , வியாழக்கிழமை 7 அல்லது 8 என்ற இறுதி இலக்கத்தைக் கொண்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ,வெள்ளிக்கிழமை 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்களுமே இவ்வாறு வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.