Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவினால் தாபிக்கப்பட்ட நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது

நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி தாபிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட விஜய வியாபார குழுமம் மற்றும் ஊஐடீ வர்த்தக நிறுவனம் 15 மில்லியன் ரூபா, இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் சங்கம் 15.5 மில்லியன் ரூபா அன்பளிப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அளவையியல் திணைக்களத்தின் பணிக்குழாம் அதிகாரிகள் சங்கம், பட்டதாரி பணிக்குழாம் அதிகாரிகள் சங்கம் 5 லட்சம் ரூபாவும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை 
தெரிந்துகொள்ள முடியும்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.04.17

No comments

Powered by Blogger.