Header Ads



உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 70 ஆயிரத்தை கடந்தது


உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது.

தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 15,887, ஸ்பெயின் 13,055, அமெரிக்கா 9,620, பிரான்ஸ் 8,078, பிரித்தானியா 4,934, ஈரான் 3,603, சீனா 3,329 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம் உலக அளவில் கொரோனாவுக்கு 12,82,040 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 269,451 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்கா 3,36,851, ஸ்பெயின் 1,35,032 இத்தாலி 1,28,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. இந்த நிலைமைக்கு WHO முதல் காரணம். ஆரம்பத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றது நிலைமை மோசமானவுடன் அணிய சொல்கிறது.மாத்திரமல்ல சீனாவில் நிலைமை மோசமானபோது தைவான் WHO இங்கு முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை உத்தியபூர்வமாக அறிவித்தும் WHO கணக்கில் எடுக்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.