Header Ads



கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா - பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 3-வது இடத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.   

அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. We belong to Allah and to him we shall return.?

    ReplyDelete
  2. உலகிற்கு கிடைத்த சாபம்தான் இந்த American presidentயும் இந்தியாவின் preministerயும் இறைவன் பிடிக்க நினைத்தால்.ஒரு கொம்பனாலும். எதுவும் செய்ய முடியாது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வார்கலேயானால் சரி

    ReplyDelete

Powered by Blogger.