Header Ads



3 மாதங்களுக்காவது தேர்தல் பற்றி எவரும், வாய் திறக்காமல் இருப்பதே நல்லது

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் நாட்டின் இயல்பு நிலை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து சிந்திக்கவே முடியாது. எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தேர்தல் பற்றி எவரும் வாய் திறக்காமல் இருப்பதே நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாடாளுமன்றத் தேர்தல் பற்றி இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நாம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

ஆனாலும், கொரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்தால் அன்றைய தினமும் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பின்னர் அறிவித்துள்ளார்.

எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தேர்தல் பற்றி எவரும் வாய் திறக்காமல் இருப்பதே நல்லது. முதலில் கொரோனா என்ற கொடிய அரக்கனை இந்த நாட்டிலிருந்து நாம் இல்லாதொழிக்க வேண்டும். அதன்பின்னர்தான் தேர்தல் பற்றி சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.