Header Ads



நாங்கள் 2 வைரஸ்களுடன் போராடி வருகிறோம் - ஈரான்

உலகில் ஐரோப்பிய நாடுகள் ஒரு வைரசிடம் போராடிக் கொண்டிருக்க, நாங்கள் இரண்டு வைரசிடம் போராடி வருவதாக ஈரான் அதிப ஹசன் ரவ்ஹானி கூறியுள்ளார்.

ஈரானிலும் இந்த வைரஸால் 70,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரஹ்வானி கூறுகையில், ஐரோப்பிய நாடுகள் ஒரு வைரஸிடன் போராடிக் கொண்டிருக்க, நாங்கள் (ஈரான்) இரண்டு வைரஸ்களுடன் போராடி வருவருதாக கூறியுள்ளார். அதாவது கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார தடையை தான் அவர் இரண்டு வைரஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீறி ஈரான் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் எங்கள் மீதான எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரீப் வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.