Header Ads



உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் 211,065

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது.

தற்போதைய நிலவரப்படி, 30 லட்சத்து 45 ஆயிரத்து 84 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 18 ஆயிரத்து 620 சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 56 ஆயிரத்து 427 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 9 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 282 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா - 56,189
இத்தாலி - 26,977
ஸ்பெயின் - 23,521
பிரான்ஸ் - 23,293
ஜெர்மனி - 6,021
இங்கிலாந்து - 21,092
துருக்கி - 2,900
ஈரான் - 5,806
சீனா - 4,633
பிரேசில் - 4,298
கனடா - 2,701
பெல்ஜியம் - 7,207
நெதர்லாந்து - 4,518
சுவிட்சர்லாந்து - 1,640
அயர்லாந்து - 1,102
ஸ்வீடன் - 2,274
மெக்சிகோ - 1,351

No comments

Powered by Blogger.