Header Ads



1,500 கொடிய வைரஸ்களை பாதுகாத்து வைத்திருக்கிறதாம் சீனா - அமெரிக்கா நிதி அளித்து ஊக்குவிப்பு

உலக நாடுகளை கதிலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் உருவானதாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகர ஆய்வகத்திற்கு அமெரிக்க அரசு நிதியுதவி அளித்து ஊக்குவித்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வுஹான் நகர ஆய்வகத்திற்காக வெளவால்களை 1000 மைல்கள் தொலைவில் இருந்து கூட பிடித்துவந்து கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

குறித்த ஆய்வுகளுக்காக அமெரிக்க அரசு சுமார் 3.7 மில்லியன் டொலர்கள் வரை நிதியுதவி அளித்து ஊக்குவித்து வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான மரபணுவை வுஹான் நகரில் இருந்து ஆயிரம் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள யுன்னன் பிராந்தியத்தில் உள்ள குகைகளில் வாழ்ந்த வெளவால்களில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அனைத்து ஆய்வுகளுக்கும் அமெரிக்காவின் நிதியுதவியும் ஆதரவும் இருந்து வந்துள்ளது. அமெரிக்க அரசு நிதியுதவி மட்டுமின்றி பல்வேறு அமெரிக்க கல்வி நிறுவனங்களும் வுஹான் ஆய்வகத்தில் பங்குதாரர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.

மட்டுமின்றி, அலபாமா பல்கலைக்கழகம், வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய வனவிலங்கு கூட்டமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா மாதிரிகளை பிறந்து 3 நாட்கள் மட்டுமேயான பன்றிக்குட்டிகளில் செலுத்தி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சீன மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று பன்றி மாமிசம். வுஹான் ஆய்வகத்தில் இருந்து வுஹான் உணவு சந்தைக்கு வெறும் 10 மைல்கள் தொலைவே உள்ளது.

மட்டுமின்றி, கொரோனா பாதிக்கப்பட்ட ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் வுஹான் ஆய்வாளர்கள் நடமாடியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மட்டுமின்றி வுஹான் உணவு சந்தையில் இருந்து சுமார் 3 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இன்னொரு ஆய்வகத்திலும், வெளவால்கள் உள்ளிட்ட விலங்குகளிடம் உயிரியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

37 மில்லியன் டொலர் தொகையில் கட்டமைக்கப்பட்டுள்ள வுஹான் ஆய்வகமானது 1,500 க்கும் மேற்பட்ட கொடிய வைரஸ்களை பாதுகாத்து வைத்திருக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

2002 மற்றும் 2003 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 8,000 பேர் பாதிக்கப்பட்டு சுமார் 775 பேர்களை பலிவாங்கிய சார்ஸ் கிருமி தாக்குதலுக்கு பின்னரே சீனா அரசு வுஹானில் இந்த ஆய்வகத்தை நிறுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.