Header Ads



11 வாரங்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்தில் 11 வாரங்களேயான ஆண் குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளது.

தற்போது லீசெஸ்டர் ரோயல் இன்ஃபர்மரியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அரேஸ் பானிஸ்டர் என்ற இக் குழந்தையானது கடந்த திங்கட்கிழமை அதிக உடல் வெப்பநிலையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் மறுநாள் குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

இந் நிலையில் குழந்தை தற்போது சிகிச்சை பெற்று வருவதாக குழந்தையின் தாயர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் 98,476 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 12,868 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

photo Credit : Daily mail

No comments

Powered by Blogger.