Header Ads



பாடசாலை விடுமுறை காலத்தில் www.e-thaksalawa.moe.gov.lk கல்விக்கூடத்திற்கு வாருங்கள்


பாடசாலை விடுமுறை காலத்தில் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விட்டுப்பட்டு நேர காலத்தை வீணடிப்பதற்கு பதிலாக கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஈ- தக்சலாவ  பகுதிக்கு நுழையுமாறு கல்வி அமைச்சு  மாணவ ,மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.

www.e-thaksalawa.moe.gov.lk   என்ற இணையதளத்திற்கு நுழைவதன் ஊடாக ஈ-தக்சலாவ கல்விக் கூடம் என்ற பகுதியுடன் இணைப்பை ஏற்படுத்த முனையும். 

 சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலமாக  முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரைக்கும் 6 வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரைக்குமான பாடப்பரப்புகளும் செயற்பாட்டு பயிற்சிகளும் வினாத்தாள்களும் உட்சேர்க்கப்பட்டுள்ளன.ஆங்கில மொழிக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஊடகப்பிரிவு
கல்வி அமைச்சு 

1 comment:

Powered by Blogger.