Header Ads



கொரோனாவுக்கு (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய மருந்தை உடனடியாக பயன்படுத்துங்கள் - டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயர்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார். 

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி, சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 18-ம் திகதி அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகளில், ‘அமெரிக்க மக்களின் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்புக்கு நான் பாதுகாப்பு அரணாக இருப்பேன். 

இந்த சீன வைரஸ் (கொரோனா வைரஸ்) தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையிடம் இருந்து வந்த ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார். 

ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையை பாராட்டியுள்ளார். 

மேலும், மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மருந்தை உடனடியாக பயன்படுத்துங்கள்! விரைவாக செயல்படுங்கள்! கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் எனவும் தனது அடுத்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. Ivanugale parappivittu marundu solhiranugal... Mihap periya manizap peralivu..

    ReplyDelete
  2. YOUR THE BIG CORONA FOR THIS GLOBE.MAY ALLAH GUIDE YOU IN RIGHT PATH

    ReplyDelete
  3. He is not a scientist from biomedical field to order the people to use such and such medicine and say "I hope it will work"..

    Same on American health control system.

    Learn from CHINA... They already have controlled it significantly.. So keep your pride away and ask advice from CHINA in this regard.

    HOPE the world court will investigate the culprit who spread this virus? is it from animals or from animals under the skin of human.

    God will answer them...

    ReplyDelete
  4. Firstly we must treat him for his fool behaviours

    ReplyDelete
  5. ஆமா இவரு பெரிய விஞ்ஞானி சொல்லிட்டாரு.
    சீனாவை கேட்டால் முடிஞ்சுதில்ல, நீங்க என்ன மருந்து பாவிச்சிங்க எப்படி கண்ட்ரோல் பண்ணினீங்க.
    இவன் சொல்ற மருந்து இன்னும் வேற என்ன வைரஸ் கொண்டு வரப்போகுது என்று யாருக்கு தெரியும்.
    ஆனாலும் உலகம் இவன் பேச்சை தான் கேக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.