Header Ads



இலங்கை கடற்படை அபாரம் - ஒரே தடவையில் உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் கருவியை கண்டுபிடித்தது


ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அது கடற்படை முகாம்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கடற்படைத்தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய பொது மக்களின் வசிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பொறியியல் பிரிவின் அதிகாரிகளால் ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  

கடற்படைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிருமி நீக்கி கடற்படை முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வருவதோடு கடற்படை தலைமையகத்திலும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள நிமையைக் கருத்திற் கொண்டு கடற்படை இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(எம்.மனோசித்ரா)

1 comment:

  1. Hope scientist and medical experts confirm this system.

    ReplyDelete

Powered by Blogger.