March 12, 2020

புலிகளை கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக், கொரோனா சவால் அல்ல - முற்றாக இல்லாதொழிப்போம்

பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம் என மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது' என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.

இந்த வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இலங்கைப் பிரஜை ஒருவர் மட்டுமே இங்கு கொரோனா நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் எடுத்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றிய காரணத்தால்தான் கொரோனா வைரஸ் இங்கு ஆட்கொள்ளவில்லை. தற்போது இங்கு ஒருவர் மட்டுமே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் விரைவில் சுகமடைவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணைக் குணமாக்கி அவரை நாம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம். எனவே, இந்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

9 கருத்துரைகள்:

THIS MAN DOUBLE GAME PIMPIYA SHOWING HIS IGNORANCE BY COMPARING LTTE-AND-CORONA.YOU ALL WIPED OUT WITH THE HELP OF MAINLY CHINA AND OTHER WESTERN NATIONS AND INDIA.YOU NEED THE SUPPORT OF THESE COUNTRY TO WIPE OUT EVEN CORONA.BUT THESE NATIONS THEM SELF FACING CORONA PROBLEM AND NOT IN A POSITION TO SUPPORT YOU.SO PLEASE DO NOT OPEN YOUR ROTTEN MOUTH AND UTTER COMPLETE FALSE HOOD.JAYWEEWA TO CORONA.

😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

இவன் ஒரு கேண கிறுக்கன், கொரோணாக்கு மருந்தே இல்லை, எப்படி கட்டுப்படுத்த போரானாம்?

சிறு பிள்ளைதனமான பேச்சு.என்னா ஒரு அறிவுஜீவி

இந்த மஹிந்த கூட்டத்திற்கு இதைத்தவிர வேறு ஒன்றும் பேசத்தெறியாது.

இலங்கை திருநாட்டின் அதிமேதாவிகளில் ஒருவர்.

இவன் பயங்கரவாதி பிரபாகரனை விட படு முட்டாளாக இருக்கின்றான்

Ignorant...stupid of the highest order..oppressors are taught a lesson.

மாங்காய் மடையன், இவனின் அரசும் அதே லூசனுகள்.
இல்லையென்றால், உலகம் விழித்த தருணத்தில் தூங்கிக்கொண்டு இப்போது கண்ணை திடீரென விழித்துக்கொள்வார்களா?
இறக்குமதியான கொறோனாவை ஆரம்பத்தில் இருந்தே இப்பொதுள்ள கட்டுப்பாடுகளை கொண்டு கட்டுப்படித்தியிருக்கலாம். சீனர்கள், கொறியர்கள், ஈரானியர்கள் இப்படி எவரையும் நாட்டுக்குள் பிரவேசிப்பதிருந்து அன்று உடனடியாக கட்டுப்படுத்த வில்லை.
இப்போதுள்ள அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொறோனா வரவேண்டும்.

Post a Comment