Header Ads



மைத்திரி செய்த கெட்ட வேலை, தேர்தலில் வென்றபின் விளையாட முயற்சிப்பார், மைத்திரியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் மைத்திரியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மகர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மகிந்த ,கோட்டாபய சார்பில் குரல் கொடுக்கும், மகிந்தவை கைவிட்டு செல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

நான் கூறிய மூன்று விடயங்கள் நிறைவேறியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற ஏதோ ஒன்றை உருவாக்கும் போது தாமரை மொட்டுச் சின்னத்திலேயே நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறினேன்.

மைத்திரிபால சிறிசேன கூட்டணியின் இணை தலைவர் பதவியை கோரிய போது எங்களுக்கு இணை தலைவர்கள் இல்லை என்று சொன்னேன்.

எங்களுக்கு இருக்கும் ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலில் கூட்டணியில் அல்ல.

பொதுஜன பெரமுன ஊடாக போட்டியிடுவோம் என்று நாங்கள் தெரிவித்தோம். நான் கூறிய அனைத்து விடயங்களும் தற்போது நடந்துள்ளது.

அன்று 2015 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அவரை நாட்டின் பிரதமராக பதவிக்கு கொண்டு வந்து நாட்டின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுப்பதே எனது எதிர்பார்ப்பு என நான் தெரிவித்தேன்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இரண்டு முறை மகிந்த ராஜபக்சவை நாட்டின் பிரதமராக்கினோம்.

மைத்திரிபால சிறிசேனவின் கீழ் 52 நாட்கள் மகிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமராக்கினோம்.ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர் மகிந்தவை மீண்டும் பிரதமராக்கினோம். ஆனால் இந்த இரண்டையும் நான் விரும்பவில்லை.

நாட்டு மக்களின் பெரும்பான்மையான வாக்குகளில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக தெரிவு செய்ய வேண்டம் என்பதே இதற்கு காரணம்.

நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளில் மகிந்த ராஜபக்ச இம்முறை பிரதமராக தெரிவு செய்ய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. இதற்காக மக்கள் ஏற்கனவே அணித்திரண்டுள்ளனர்.

நன்றி மறவாத மக்கள் எப்போதும் தாமரை மொட்டுடன் இருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பருந்து போல் நீர்காகத்தின் வாயில் இருக்கும் மீன பறித்து செல்லும் திறமை இருப்பதாக அண்மையில் கூறியிருந்தார்.

முன்னாள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டிலும் இந்த கெட்ட வேலையையே செய்தார். தேர்தலில் வென்ற பின்னர் விளையாட முயற்சிப்பார்களோ என்ற சந்தேகம் எமக்குள்ளது. நாங்கள் எந்த வகையிலும் அதற்கு இடமளிக்க போவதில்லை.

இதனால், பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் மைத்திரியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என நாங்கள் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். தற்போது நான் இவ்வாறு கூறியதால், நாளை முதல் சேறுபூச ஆரம்பித்து விடுவார்கள்.

யார் பாதுகாக்கவிட்டாலும் மக்கள் என்னை பாதுகாப்பார்கள் என்பது எனக்கு தெரியும். யார் இல்லை என்றாலும் மக்கள் எனக்காக குரல் கொடுப்பார்கள். இதனால்,எனது நிலைப்பாட்டை கூற நான் அஞ்சுவதில்லை என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Yes, we agree in principle that Mitree should not be offered any chance to come back to Parliament.

    ReplyDelete
  2. BE WATCH FULL HE(UKUSSA-KALUGU)WILL CATCH YOU AND DUMP YOU SOME WHERE IN POLONARUWA PADDY FIELD.AFTER THAT YOU HAVE TO COME BACK TO GAMPAHA IN AN AMBULANCE.

    ReplyDelete
  3. சபாஷ்! சரியான தீர்மானம். சிரிசேனவுக்கும் ரணிலுக்கும் புத்தியுள்ள யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.