Header Ads



"அல்லாஹ் நமக்கு எழுதியுள்ளதைத் தவிர, வேறெதுவும் நம்மைப் பீடிக்காது"

நான் உங்களுடன் சில நற்செய்திகளை, நல்லுபதேசங்களை பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகின்றேன், இந்நல்லுபதேசம் எமக்க ஓர் கல்வியறிவு பெற்ற நல்லவரிடமிருந்து கிடைக்கப்பெற்றது. அவர் எமக்கு எடுத்துறைத்தார், தற்போது இங்கு ஏற்பட்டுள்ள பென்டமிக் எனும் நிலைமை மிக அரிதானது, ஒரு மனிதனது வாழ் நாளிலே ஒரு முறைதான் இது ஏற்படக்கூடியது (உதாரணமாக உலகலாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ளது போன்று). மேலும் அவர் கூறினார், இது எமக்குக் கிடைத்த தங்கப்புதையலைப் போன்றது, நாம் இவ்வாறானதொரு மிகப்பெரிய அருளால் அருள்பாளிக்கப்பட்டிருக்கின்றோம். அவர் கூறினார், எம்மில் சிலர் இக்காலத்தைக் கடக்கும் பொழுது, தமக்கான அரண்மனைகளை சுவர்க்கத்தில் கட்டியவர்களாக வருவார்கள், எனினும் சிலர் இவ்வருளினூடாக எவ்விதப்பலனையும் பெறாதவர்களாக வருவார்கள். மேலும் அவர் பின்வரும் ஹதீஸை எம்முடன் பகிர்ந்துகொண்டார். 

நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் துணைவியாரான ஆயிஷா றழியல்லாஹுஅன்ஹுமா அறிவிக்கின்றார்கள் 

நான் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸ்ஸல்லம் அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், அது தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான் என்று தெரிவித்தார்கள். மேலும் கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியராகவும், அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் அல் புஹாரி

மேற்கூறிய ஹதீஸிலே நான்கு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன, அவற்றை ஒரு மனிதன் நிறைவேற்றுகின்ற பட்ச்சத்தில் (அவனோ, அவளோ), அம்மனிதன் உயிர்த்தியாகியின் (ஷஹீத்) நன்மைகளை, நற்பேரைப் பெற்றுக்கொள்வான். நாமனைவரும் அறிந்தவகையில், ஷஹீதின் நன்மை இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பொரியது, நன்மைகளால் அளப்பரியது, அந்தஸ்தால் மிக உயர்ந்தது. இந்த நன்மைகளால் மிகப் பெரிய, அந்தஸ்தால் மிக உயர்ந்த பெரும்பேற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள், 

நீங்கள் உங்கள், பிரதேசங்களிலேயே இருந்து கொள்ளுங்கள், அதனைவிட்டு வெளியேறாதீர்கள், எனினும் மிக முக்கியமான காரணத்தைத் தவிர (நோய்பற்றிய பயத்தின் காரணமாக நாம் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறக்கூடாது)

நீங்கள் பொறுமையுடனிருங்கள். இது தான் மிகக் கடினமான செயல். தற்போது, நாமனைவரும் எமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றோம், வழமையாக நாம் மேற்கொள்ளும் ஒன்றுகூடல்கள் அனைத்தும் தற்போது தடைப்பட்டிருக்கின்றன, மேலும் எமது திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்துக்காரணங்களுடனும், நாம் தொடர்ந்து பொறுமையாக இருப்பதுதான், மேற்கூறிய நற்பேரை அடைவதற்கான முக்கிய கருவியாகும்
மேலும், இந்நிலைமைகளுக்கு மத்தியில், நாம் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்து நல்லெண்ணம் வைப்பது. அதாவது, மேற்கூறிய ஹதீஸின் அடிப்படையில், ஒரு உயிர்த்தியாகியின், ஷஹீதின் கூலியை எதிர்பார்த்து, அல்லாஹ்விடம் நல்லெண்ணம் வைப்பது. நீங்கள் தொடந்து உங்கள் பிரதேசத்திலேயே இருந்து கொண்டு, பொறுமையுடன், தனிமைப்பட்டிருக்கின்ற நிலையில் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து நல்லெண்ணம் வைப்பது

மேலும் நீங்கள் அறிந்து வைத்துள்ளபடி. அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது. மேலும் நாம் மிக உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் நாட்டத்தை கேள்வியெழுப்ப முடியாது. மேலும் நீங்கள் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொருந்திக்கொண்டவர்களாக (2வது நிபந்தனைப்படி) தொடர்ந்து பொறுமையைக் கடைப்பிடித்தவர்களாக இருக்கவேண்டும. ஆரம்பநாட்களில் நாம் வேலைக்கு செல்வதை (சிலர்), பல்கலைக்கழகங்களுக்கு செல்வதை மற்றும் பாடசாலைக்கு செல்வதை விரும்புபவர்களாக இருந்திருப்போம். ஆனால் இப்போது இவையனைத்தும் தடைப்பட்டிருக்கின்றன. மேலும் நண்பர்களுடன், உறவினர்களுடன் வெளியில் நேரம் செலவிடுவதை விருப்பியிருப்போம், ஆனால் தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இவையனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தின்படி ஏற்பட்டதாகும். மேலும் நாம் அல்லாஹ்வின் நாட்டத்தை கேள்வி கேட்கக் கூடாது. மாற்றமாக நாம் அல்லாஹ்வின் நாட்டத்தை முழு மனதுடன் ஏற்றவர்களாக, பொறுமையுடன் இருக்க வேண்டும். 

மேற்கூறிய நான்கு நிபந்தனைகளையும் முழுமையாக அடைந்து கொள்ள நாம் முயற்சிக்கின்ற பொழுது, அல்லாஹ் எமக்கு மேற்கூறிய உயர்ந்த நற்பேரை அடைய வழியமைப்பான் நன்று நாம் நல்லெண்ணம் வைப்போம். இதுபோன்ற நற்போறு மனிதனின் வாழ்வில் ஒருமுறைதான் வரும், வந்தபோதும், அது மிக இலகுவாக அடைந்து கொள்ளக்கூடியதும் அல்ல. 

மேற்கூறிய வழிகாட்டல்களை நீங்கள் பின்பற்றுகின்றபோது ஒரு உயிர்த்தியாகியின், ஷஹீதின் அந்தஸ்த்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் பொற்றுக்கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ். பின்வரும் குழுவில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள்.

இந்நோயினால் பீடிக்கப்பட்டு மரணிக்கின்ற மனிதன்
இந்நோயினால் பீடிக்கப்பட்டு சுகமடைகின்ற மனிதன்
இந்நோயினால் பாதிக்கப்படாமலேயே இருக்கின்ற மனிதன்

நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸ்ஸல்லம் அவர்கள் எமது தயார் ஆயிஷா றழியல்லாஹுஅன்ஹுமா அவர்களிடம் கூறியது போன்று, 'அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்'.

மிக வடிந்தெடுத்த முட்டாள் மாத்திரமே இந்த மிகப்பெரிய அழகிய சந்தர்ப்பத்திலருந்து, நன்மைகளை, நற்பேருகளை பெற்றுக்கொள்ளாமல் விடுவான். இந்நிலைமை எத்தகையதென்றால் தங்கப்புதையலில் இருந்து தங்கத்தை பெற்றுக்கொள்ளாதவனின் கையேறு நிலைபோன்றது, இவ்வழகிய சந்தர்ப்த்தை தன் வாழ்நாளில் மீண்டும் அவன் அடைந்து கொள்ளாமலே அவன் இவ்வுலகை விட்டுப்பிரியலாம்.

2 comments:

  1. ஒட்டு மொத்த மனித இனமே வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொட்டு இருக்கும் நேரத்தில் இதை ஒரு அருள் என்று சொல்லி இஸ்லாத்தை முட்டாள்களின் மார்க்கமாக காட்டவேண்டாம். இப்படியான கட்டுக்கதைகளினால் முஸ்லீம்களின் மணத்துக்குளே குழப்பத்தை உண்டாகி, அவர்களை இஸ்லாத்தை விட்டும் துரமாக்க வேண்டாம்.

    மாவீரன் அஞ்சா நெச்சன் என்ற பெயர்களோடு போனாலும், போன உயிர் வரப்போவதில்லை. இறைவன் நாடினால்தான் மௌத்து வரும் என்று சொல்லிக்கொட்டு தண்டவாளத்தில் போய் நின்றாள், யாரு வந்தாலும் வராவிட்டாலும் ரயில் வரும். தயவு செய்து நம் சமூகத்தை ஈமானின் பெயரில் முட்டாள் ஆக்கவேண்டும்.

    ReplyDelete
  2. https://www.facebook.com/235491043158/posts/10158204285378159/

    ReplyDelete

Powered by Blogger.