Header Ads



கேரளாவில் கொரோனாவால் மரணித்தவரின், ஜனாசா நல்லக்கம் செய்யப்பட்ட விதம்

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட மட்டாஞ்சேரியை சேர்ந்த 69 வயது பெரியவர் மரணமடைந்தார்.

ஏற்கனவே இதய நோயாலும், உயர் இரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தவர் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அரபு நாட்டிலிருந்து ஊருக்கு திரும்பியவர்...

களமச்சேரி மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த ஜனாசா அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வீடியோ மூலம் காட்டிக்கொடுக்கப்பட்டது.

அரசின் புரோட்டாக்கால் விதிகளின் படி கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர் உடலை யாரும் பார்வையிட அனுமதியில்லாததால், பாதுகாப்பான முறையில் பொதியப்பட்டு அரசுத்துறை ஆம்புலன்ஸ் மூலம் சுள்ளிக்கல் ஜும்ஆ மசூதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கபரஸ்தான் காம்பவுண்டுக்கு மேலாக ஜனாசாவை பெற்றுக்கொண்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சேவை பிரிவான Ideal Relief Wing (IRW ) மற்றும் SDPI வாலண்டியர்கள் அங்கேயே ஜனாசா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.

யா அல்லாஹ்!  மரணித்தவருக்கு உயர்ந்த சுவனத்தை கொடுப்பாயாக....  மனைவி மற்றும் உறவுகளுக்கு  பொறுமையை கொடுப்பாயாக...  சமூக சேவைகளில் ஈடுபடும் சகோதரர்களுக்கு ஆன்ம பலத்தை பாதுகாப்பை வழங்குவாயாக....

Colachel Azheem





No comments

Powered by Blogger.