Header Ads



அன்புள்ள உறவுகளே தயவுசெய்து, இதை கவனத்தில் கொள்ளுங்கள்

அன்புக்குரிய நண்பர்களே, சகோதரர்களே, தாய்மார்களே, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வு கிட்ட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தங்களுடைய உயிரையும் துச்சமாக மதித்து தங்களுடைய ஆரோக்கியமான வாழ்வையும் பனயம் வைத்து எங்களுக்காக வேண்டி எங்களுடைய ஆரோக்கியமான வாழ்வுக்காக வேண்டி உழைத்துக் கொண்டிருக்க கூடிய வைத்திய நிபுணர்களுக்கும் அரச சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டுஅவர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான,நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமான சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இஸ்லாம் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் மிக அழகாக எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறது.

சுத்தம் எத்தனை முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஐவேளை வுழு செய்து கை,கால், முகம் போன்றவற்றை சுத்தம்  செய்யக்கூடியவர்கள்.

இப்படியாக எங்கள் இஸ்லாம் சொல்லித் தந்திருக்க கூடிய ஒழுக்கங்களையும் பண்பாட்டை நாகரீகத்தை நான் உங்களுக்கு சொல்லி நீங்கள் விளங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் இந்த தருணத்தில் இந்த நாட்டினுடைய பாதுகாப்பு அதிகாரிகளும் அரச சுகாதார அதிகாரிகளும் எங்களுக்குச் சொல்லித் தரக்கூடிய அறிவுரைகளை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த முன்வரவேண்டும்.

பொது இடங்களுக்குப் போனால் எப்படி நடந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளி எப்படி இருக்க வேண்டும் குறைந்தது ஒரு மீட்டர் தூரம் இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வேண்டும். போன்ற அறிவுரைகள் இன்று கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.. பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஓரளவு அதனை கடைப்பிடிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.ஆனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்பதை ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் காட்டிக் கொண்டிருக்கின்றன. 

எனவே எங்களுடைய பெயரை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் நீங்கள் ஒருவர் செய்யும் தவறு இந்த நாட்டில் வாழும் 20 லட்சம் முஸ்லிம்கள் செய்யக்கூடிய தவறாக மாறிவிடும்.

சமூக ஊடகங்கள் சிறிய தவறையும் பூதாகரமாக்கிவிடுகின்றன என்பதால் கூடுதல் அவதானம் தேவை.

எனவே கடைகளிலோ Super Market களிலோ வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியைப் பேணுங்கள். இந்த அறிவுரைகளைப் பேணுவதால் உங்களையும் பாதுகாத்து கொள்ள முடியும். அடுத்தவரையும் பாதுகாக்க முடியும்.ஏனெனில் இந்த வைரஸ் யாருக்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.எனவே எனக்கு முன்னால் இருக்கக்கூடிய அல்லது பின்னால் இருக்கக்கூடிய நபருக்கு அந்த கிருமி தொற்றி இருக்கலாம் அவர் விடக்கூடிய மூச்சு என்னை அறியாமல் எனக்குத் தொடரலாம் அவருடைய கைகள் என்னுடைய மேனியில் படலாம். 

எனவே அதிகாரிகள் எமக்கு எத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றார்களோ அந்த அறிவுரைகளை கச்சிதமாக பின்பற்றி சிறந்த பிரஜைகளாக வாழ்ந்து சமூகத்துக்கும் நாட்டுக்கும் நல்ல பெயர் சேர்ப்போம்

முப்தி யூஸுப் ஹனிபா

1 comment:

  1. THIS KIND OF HABITS PEOPLE NO NEED IN SRI LANKA LET THEM TO DIE BY COVID-19 OR GIVE THEM COVID-19

    ReplyDelete

Powered by Blogger.