March 22, 2020

இந்த வைரஸால் அநியாயமாக அழிந்து போக வேண்டாம் - ஒரு எச்சரிக்கை பதிவு

சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு தமிழில், (கட்டாயம் முழுமையாக வாசியுங்கள்)*
*உங்களுக்குள்ளேயே பல மாற்றங்களை காண்பீர்கள்

*நன்றாகக் கேளுங்கள்.. இதை கூறுவது இலங்கையில் ஒரு சிறந்த மருத்துவர், ஒரு ஜோக்கர் அல்ல.*

*( சில விஷயங்களை கன்னத்தில் அறைந்ததை போல் கூறியுள்ளேன்.. வேறு வழியில்லை )*

உங்களுக்கு சுனாமி தெரியும். அதன் அவல நிலை உங்களுக்குத் தெரியும்.அனுபவம் இருக்கிறது .. தன்னுடைய குடும்பத்தின் மரண அளவு தெரியும் .. அன்புக்குரியவர்களின் இறப்புகளைப் பார்த்துள்ளோம் , குடும்பத்தோடு இறந்தவர்களை கண்டுள்ளோம்.. அதே போல் உயிர்களும் உடமைகளும் எவ்வளவு அழிந்து சென்றன என்பதைப் கண்களால் கண்டுள்ளோம். இன்னும் மறக்கவில்லை..

ஈஸ்டர் தின தாக்குதல் எப்போது என்பது உங்களுக்குத் தெரியும், ஒரு சில நொடிகளில் எங்கள் சொந்த மக்கள் எவ்வாறு துண்டுகளாக உடைந்தார்கள் என்பதை கண்ட நீங்கள் , தங்கள் அன்பு மகள் துண்டுகளாக இருப்பதை பார்த்த அம்மாக்கள் மற்றும் அப்பாக்கள் இருக்கிறார்கள் ..
தங்கள் பெற்றோர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு துண்டுகளாக உடைந்திருப்பதைக் கண்ட குழந்தைகள் உள்ளனர். சுற்றுப்பயணத்திற்கு வந்து குடும்பங்களை இழந்து திரும்பிச் சென்ற வெளிநாட்டினரை அறிவோம்..

இது இரண்டில் ஒன்று மறுபடியும் நிகழும் எனின் உங்களுக்கு அது ஒரு நகைச்சுவையா ??

நீங்கள் கடலுக்குப் போவீர்களா ??

நீங்கள் தேவாலயத்திற்குச் செல்வீர்களா?

ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் ... இப்போது வரப்போவது இது இரண்டையும் போன்றதொரு அழிவு அல்ல.. *இது போன்றவற்றோடு ஒப்பிட முடியாத அளவு பாரதூரமானது*..
பயமுறுத்தவில்லை. தயாராகுங்கள். பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்.
முன்னெப்போதையும் விட இலங்கையில் அதிகமான மக்கள் இறந்து போவர்.. போரின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தோற்கடிக்கப்படும்.
ஆனால் நீங்கள் இன்னும் கவலைப்படவில்லை... ஏன்???
முந்தைய இரண்டு சம்பவங்களை போன்ற அனுபவம் உங்களுக்கு இல்லை என்பதால் ...
இத்தாலி உலகின் சிறந்த வைத்திய பிரிவைக் கொண்ட நாடு, ஆயினும் இன்று அந்நாடு முழுவதும் பாழாகிவிட்டது ...
சீனாவில் மக்கள் 20 லிட்டர் வெற்று நீர் பாட்டிலை வெட்டி தலையில் இருந்து மறைத்து ,நாய் பூனைகளுக்கும் கூட முகமூடி அணிவித்து இதில் இருந்து பிழைத்தனர்..
இலங்கை மக்களால் அத்தகைய தியாகத்தை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா ... ?? இந்த முகமூடி அணிய முடியாது, அரிக்கிறது , மூச்சு விட முடியவில்லை என புலம்பித் திரிபவர்கள் !!
இந்த நேரத்தில் இலங்கை இத்தாலியின் அளவைக் கடந்துவிட்டது ...
தொலை காட்ச்சி, பத்திரிகை செய்திகளுக்கு ஒரு வரம்பு உள்ளது - அரசாங்கம் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு ... ஆனால் உண்மை அதுவல்ல. நாங்கள் இப்படியே இருப்போமானால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் பாதி பேர் இறந்து போக கூடிய நிலைமை ஏற்படும் ..
அது குறிப்பாக எம் முட்டாள் தனத்தினாலும் ,தலை கனத்தினாலுமே ஆகும்..
இதிலிருந்து தப்பிக்க சில விஷயங்கள் மட்டும் செய்தால் போதும் .. தயவு செய்து
01.நாங்கள் இராவணனின் தலைமுறை, இது சிங்கள பெளத்த நாடு என கூறிக்கொண்டு திரிய வேண்டாம்.. வைரசிற்கு இது எதுவும் தெரியாது .. அது மேட் இன் சைனா.
2. அரசாங்கத்தினால் சில நேரங்களில் உண்மையைச் சொல்ல முடியாது.. சொன்னால் எங்கள் நாட்டு மக்களின் நிலை என்னவாகுமென அவர்கள் அறிவர்.. அதனால் அவர்கள் கூறுவதை மட்டுமே மலை போல் நம்பி கோட்டா அவர்கள் இருப்பதால் பிரச்சினை இல்லை , உலகின் சிறந்த ஆர்மி இருப்பதால் நோ ப்ரோப்லம்ஸ் என கூறி கொண்டு திரிய வேண்டாம்..
வைரஸுக்கு அவர்களில் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது..
அரசாங்கத்தை குறை கூற வேண்டாம். இதை அரசாங்கத்தால் மட்டும் தடுக்க முடியாது.. நீங்களும் நானும் தடுக்கவில்லை என்றால்.., இது எம் செயற்பாடுகளை பொறுத்தே உள்ளது..
03. முகமூடி, கையுறை அணிந்தால் , மற்றவர்கள் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்காதீர்கள்..உங்கள் குடும்பத்தை வாழ வைப்பது அவர்கள் அல்ல.
மற்றவர்கள் அணிவார்கள் என்றால் பரவாயில்லை இல்லையென்றால் கிச் கிச் போல் இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்களும் உங்கள் முழு குடும்பமும் நிச்சயமாக இறந்துவிடுவீர்கள் ... ( இப்படி சொல்றத தவிர வேற வழி இல்ல )
உங்க வீட்டில் ஒருவர் இறந்தால் தான் இவற்றை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால் .. இதை கண்டு கொள்ளாதீர்கள் )
04. இன்னும், காரணங்களை உருவாக்கி கொண்டு நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் ...
தேவாலயத்திற்கும், போதி பூஜைக்கும் ,தன்சல் , சுற்றுலாவிற்கு சென்றால் மட்டுமல்ல. சாலையில் உள்ள ஒரு பஸ்ஸில் ஏறி இறங்கினால் போதும் ...
நீங்கள் இன்னும் அதை செய்து கொண்டு இருந்தால் , உங்கள் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை நீங்களே கொல்லப் போகிறீர்கள். உங்கள் முழு குடும்பமும் இன்னும் ஒரு மாதத்திற்குள் மண்ணின் கீழ் இருக்கும்.
05. நம்புவதாயின் நம்புங்கள்..
நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உலகின் அதிக மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நாடென இலங்கை விருது எடுக்கும்..
முகமூடி போட முடியாது - மூச்சுத் முட்டுகிறது - அரிக்கிறது - கிச் கிச் போன்றது ... இது போன்ற முட்டாள் கதைகளை கூற வேண்டாம், மற்றவர்கள் அணியும் வரை காத்திருக்க வேண்டாம் ... எல்லோரும் இன்னொருவர் அணியும் வரை காத்திருந்தால் யாரும் கடைசிவரை அணிவதில்லை..
வேலைக்குச் செல்ல வேண்டாம். லீவு தரவில்லை எனின் நின்று விடுங்கள் வீட்டில் இருங்கள்...வேலை போய்விடும்... வருமானம் நின்றுவிடும்.ஆனால் நீங்களும் உங்கள் குடும்பமும் உயிர் வாழ்வீர்கள்...
உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால்.., நீங்கள் போகும் பஸ்ஸில் ,வீதியில் , வேலை தளத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸை வீட்டிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுப்பீர்கள் ...
அவசர பயணம் செல்வதாயின் முகமூடி மற்றும் கையுறைகளை கட்டாயமாக அணியுங்கள். வீட்டிற்கு வந்து முதலில் கைகளைக் கழுவுங்கள். சுத்தமாக இருங்கள். துணிகளைப் வெயிலில் போடுங்கள்...
06. வீட்டிலேயே இருங்கள்.. அவ்வளவு தான்... கஷ்டம் தான் வேறு வழியில்லை .. இவ்வளவு காலமாக படிக்காத புத்தகத்தைப் படியுங்கள்.. படம் ஒன்றை பாருங்கள். யாரையும் வீட்டிற்கு வர விடாதீர்கள். கோபப்பட்டாலும் பரவாயில்லை ..
வைரஸை எடுத்து கொண்டு உங்களை கொலை செய்ய வருவார்கள்..அது அவருக்கும் தெரியாது அனால் அதுதான் உண்மை.. வீட்டிலேயே சத்தமில்லாமல் இருந்து விடுங்கள்.. இல்லையெனில் ஸொரி மச்சான் திரும்பி போய்விடு என அனுப்பி விடுங்கள். கோபப்பட்டால் பிறகு சமாதானம் செய்து கொள்ளலாம் .. அதை பற்றி நினைக்க தேவையில்லை..
உங்களால் அதை செய்ய முடியாது என்று எனக்கு தெரியும். உங்களால் ஒருவரை விட்டு குறைந்தது 3 அடி தூரத்தில் கூட இருக்க முடியாது என்று..
இறுதியாக, நான் கூறுகிறேன் ...
இறப்பதாயினும் கொஞ்சம் மரியாதையாய் இறந்து போக வேண்டும்.. மதிப்பிற்குரிய விதத்தில். இதில் இறப்பதெனின் இறப்பவரின் பெயர் கல் வெட்டில் பொறிப்பதை விட்டும் குறைந்தது சவப்பெட்டி கூட கிடைக்காது புதைப்பதற்கு...
செய்ய வேண்டியதெல்லாம் தெரிந்து கொண்டே ...
இந்த வைரஸால் அநியாயமாக அழிந்து போக வேண்டாம்.

இன்று நமக்குத் தெரியாவிட்டாலும், இது நாடு முழுவதும் பரவப் போகிறது. எனவே, அன்பாக கூறக்றேன், கவனமாக இருங்கள்.. இன்னும் ஒரு சில நாட்களுக்கு..
இன்று , நாளை அதை நீங்கள் செய்ய முடியாவிட்டால், உங்களால் ஒருபோதும் முடியாது ...
(இதைச் சொல்வதற்கு வேறு வழியில்லை - மனதை தைரியபடுத்தி கொள்ளுங்கள்.. கவனமாக இருங்கள்... )
@ சிந்தக கருணாரத்னா

5 கருத்துரைகள்:

Please do not make panic in the minds of people. All this mania about this virus is created by some greedy mafia in the world. Yes, we should take all [precaution but this is nothing a competition between world power for economic and political domination. Drs should not create some scares and fear among people. too much of it has been done now.

If the people adhere to this advice and the virus didn't harm then nothing to worry. If the people refuse this now and the virus harm as predicted here then one can imagine what will be the future.

Dr said is 100000000% correct, commentators must try to advise the public not the doctor...Even "Unknown" may be doesn't know the reality, we know well the reality as we r in abroad.... you people must be prepared its not a jock...! God bless us all

Some fools will never heed to anyone who advises them.

Hello UNKNOWN. If you are a fool and idiot shut up and go to hell. Which part of the world you are living. Do you know what's happening. Please for God's sake get lost from this comments. Don't try to be a Pundit. Please let the wise people decide. Nobody wants any Dhajjal's advise to the humanity. Thank you.

Post a comment