Header Ads



"உணவு விநியோகிக்கும் வாகனத்தின், சாரதியாக இணைய விரும்புகிறேன்" - சங்ககார

பொலிஸ் பிரிவுகளில் நாட்டு மக்களுக்கு உணவு விநியோகிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உணவு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்துக்கொண்டு உணவை எடுத்துச்செல்லும் வாகனத்திற்கு சாரதியாக பங்களிப்பு செய்ய விரும்புவதாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் குமார சங்ககார, தலங்கம பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தெரிவித்துள்ளார்.

சுய தனிமைப்படுத்தல் காலம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளதாகவும், அதன் பின்னர் உணவு விநியோகிக்கும் வாகனத்தின் சாரதியாக செயற்பட தயாராக இருப்பதாகவும் சங்ககார கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் சங்ககாரவின் இந்த தொலைபேசி அழைப்பு குறித்து தலங்கம பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

“ நீங்கள் இந்த கதையை நம்புவீர்களோ தெரியாது எனினும் அப்படி நடந்தது. சற்று நேரத்திற்கு முன்னர் தலங்கம பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியின் செல்போனுக்கு குமார் சங்கார அழைப்பொன்றை எடுத்தார்.( சங்ககாரவும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி அமித் ஜெயமாஹாவும் நண்பர்கள்) அழைப்பை எடுத்த சங்ககார, “ எனது தனிமைப்படுத்தல் காலம் இன்னும் இரண்டு நாட்களில் முடிகிறது.

அதன் பின்னர் பொலிஸார் மக்களுக்கு உணவு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் இணைய விரும்புகிறேன்.

தேவை என்றால் வாகனத்தின் சாரதியாக எனனால் பணியாற்ற முடியும்” என கூறினார்” என அந்த அதிகாரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. You should do it, all high level politicians will follow you.

    ReplyDelete
  2. அய்யயா நான் என்ன நினைத்தேன் என்றால் Pakistan icc umpire aleem dar போல இலவசமாக உணவு கொடுப்பீர்கள் என்று.

    ReplyDelete
  3. He is a great person with human qualities .
    Welcome Sanga.
    You are a great Ambassador of this country

    ReplyDelete
  4. He has these qualities...

    ReplyDelete
  5. You deserve it Person MR.CAPETIAN

    ReplyDelete

Powered by Blogger.