Header Ads



கோட்டாபயவுக்கு ஆதரவளிக்காமை தமிழ்கட்சிகள் இழைத்த மாபெரும் தவறு - விக்னேஸ்வரன்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்காமை தமிழ்கட்சிகள் இழைத்த மாபெரும் தவறு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் இன்று -07- இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தன.

இது சிங்கள மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது.

எதனை குறித்தும் ஆராயாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த இந்த தீர்மானமானத்தினால் முழு சமூதாயத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு ஏனைய நாடுகள் அழுத்தங்களை வழங்க வேண்டிய நிலை உள்ளது.

எனினும் கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான மக்கள் பிரதிநிதிகள் அது குறித்து சிந்திக்காது தன்னிச்சையாக செயற்பட்ட காரணத்தால் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கை வலுவிலந்துள்ளது.

ஆகவே தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மாற்றுத்தலைமைத்துவத்;திற்கான அழைப்பினை விடுத்ததாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.