Header Ads



இத்தாலியிலிருந்து தப்பிவரும் இலங்கையர்கள்? நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்து

இத்தாலி நகரங்களுக்கு நுழையவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் நாடு திரும்பவது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.

அவசியமான விடயங்களுக்கு மாத்திரம் வைத்திய அறிக்கை பெற்று இத்தாலியில் இருந்து வெளியேற முடியும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இத்தாலியில் கொனோரா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அவர்களில் தொற்றுக்குள்ளானவர்களின் 12,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரோம், சியாம்சினோ மற்றும் பியுட்டிசினோ விமான நிலையங்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.

அந்த நாட்டு மக்களை வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்குமாறு இத்தாலி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து நாடு தங்கள் நாட்டிற்கு வரவிருந்த 14000 இத்தாலி ஊழியர்களை தடுத்து நிறுத்தியுள்ளது.

சில இலங்கையர், இத்தாலி எல்லை ஊடாக வராமல், காட்டு வழியை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இலங்கைக்கு வருவதாக இத்தாலி தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மட்டக்களப்பிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் பரிசோதிக்கப்படுகின்றனர். குறித்த மத்திய நிலையத்திலிருந்து மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை நேற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.