Header Ads



ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது - புத்தளம் பொலிஸார் அறிவுறுத்தல்

புத்தளத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என புத்தளம் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். 

இன்று (18) மாலை ஒலிபெருக்கி மூலம் புத்தளம் நகரம் எங்கும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் புத்தளம் பொலிஸாரினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

இத்தாலி உள்ளிட்ட வேறு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மத்திய நிலையங்களுக்குச் செல்லாதுள்ள ஆயிரத்திற்கும் அதிகமானோர், புத்தளம் மாவட்டத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர்களை அடையாளம் காண்பதற்காக புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் இவ்வாறு இன்று (18) மாலை 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 

இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டமையை அடுத்து, புத்தளத்தில் மக்கள் வீட்டுக்குத் தேவையான உணவு பொருட்களை முண்டியடித்துக்கொண்டு கொள்வனவு செய்தனர். 

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

No comments

Powered by Blogger.