Header Ads



சஜித் - ரணில் என பிரிந்தால், முஸ்லிம் பிரதிநித்துவம் குறையும் ஆபத்து

- அன்ஸிர் -

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள, மோதல் நிலை சஜித் - ரணில் என்ற 2 அணிகளை உருவாக்கியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் அந்த 2 அணிகளும் இருவேறு அணிகளாக தேர்தலில் களமிறங்கினால், முஸ்லிம் வாக்குகளும் சிதறுண்டு, முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் அபாய் உருவாகியுள்ளது.

சஜித் - ரணில் சார்பாக, முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டால், முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளும் பிரிந்துவிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு, கண்டி போன்ற மாவட்டங்களில் இந்நிலை ஏற்படுமென கவலை வெளியிடப்பட்டுள்ளது.

எப்படியேனும் தமக்கு வேட்புமனு கிடைத்து விட வேண்டுமென, ஆர்வமாக இருக்கும் சிலர், இதனை சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம் வாக்குகள் சிதறுண்டு போக, காரணியாகஅமைந்து விடுவார்கள் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. ராஜபக்ச ரணில் என பிரிவது வளமை. அது ஏற்கனவே முஸ்லிம்களுக்கு தெரிந்த சதுரங்கமாகும். ராஜபக்ச ரணில் சஜித் என பிரிந்தால் கொழும்பு கண்டி மட்டுமல்ல அம்பாறை உட்பட இலங்கை முழுவதிலும் பாதிப்பு ஏற்படும்.

    ReplyDelete

Powered by Blogger.