Header Ads



கல்முனையில் கொரோனாவை தடுக்க கூட்டுச் செயற்பாடு


கல்முனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான அவசர செயற்பாடுகளை அரச, தனியார் நிறுவனங்கள் இணைந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம்.சித்தீக், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜௌபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை அவதானித்தல்,
சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளல்,  பொது இடங்களுக்கு தேவை நிமிர்த்தம் வரும் மக்களுக்கு கை கழுவுதற்கான ஏற்பாடு செய்தல், விடுதிகளில் இருப்பவர்களை அவதானித்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இச்செயற்பாடுகளுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

(அஸ்லம் எஸ்.மௌலானா)




1 comment:

  1. கல்முனை பிரதேச செயலாலர் எம்.எம்.நசீருக்கு பாராட்டுக்கள். கல்முனை வடக்கு முழுஅதிகாரம் பெறும்வரை தமிழர்களையும் இணைத்து செயல்பட்டுவதே சிறப்பாக இருக்கும் ஐயா. என் கருத்து தவறெனில் மன்னிக்கவும்,

    ReplyDelete

Powered by Blogger.