March 29, 2020

முஸ்லிம் சமூகம் பல்வேறு, விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது - வேதனைப்படுகிறார் அலி சப்ரி

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அக்குறணை மற்றும் அட்டுளுகமவைக்கு முற்றாக சீல் வைக்கப்பட்டமைக்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலே காரணம். எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக பரவும் அபாயம் உள்ளதால் முஸ்லிம்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்.

அத்துடன் ஒரு சிலர் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடப்பது முழு சமூகத்துக்கும் அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதியின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தில் ஒருசிலர் சட்டதை மீறி செயற்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

நாட்டின் சட்டத்துக்குக் கட்டுப்படுவதே இஸ்லாமிய வழிமுறையாகும். நபி வழியும் இதுவாகும். ஊரடங்கு காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசாங்கமும் உலமா சபையும் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளன. அரசாங்கத்தினதும் உலமா சபையினதும் அறிவுறுத்தல்களை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சரிவர கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் இதற்கு மாற்றமாக நடந்து முழு முஸ்லிம் சமூகத்துக்கும் அவப் பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுலிலிருக்கும்போது ஹொரவப் பொத்தானை, பேருவளை போன்ற பகுதிகளில் நாட்டின் சட்டத்துக்கு முரணாக பலர் நடந்து கொண்டனர். இத்தகையோரின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் சமூகம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றியோர் தம்மை சமூகத்தில் இனங்காட்டிக் கொள்ள அச்சப்பட்டு தலைமறைவாகினர். இது எயிட்ஸ் நோய் போன்று வெட்கப்படக் கூடிய ஒன்றல்ல. தங்களுக்கு நோய்த் தொற்று இருப்பதை சிலர் மறைத்ததன் காரணமாகவே சில ஊர்களை மூடி விட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வந்த நபரை வீட்டில் தனிமைப்படுத்தி நடந்து கொள்ளவேண்டும் என சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தி அனுப்பப்பட்டும் அவர் பொறுப்பற்று செயற்பட்டதன் காரணமாகவே அட்டுலுகம கிராமம் மூடப்பட்டது.

அதேபோன்று இந்தோனேஷியாவுக்கு ஜமாஅத் சென்றுவிட்டு வந்த சிலரின் செயற்பாடுகள் காரணமாக புத்தளம் மற்றும் அக்குறணை பகுதியில் உள்ள கிராமங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சிலரின் தவறால் முழுக் கிராமமும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

6 கருத்துரைகள்:

Mr. A.S... No question mistake of handfull numbers of Muslims...enlarged by RACIST MEDIA.. Why not you take action to stop their racism in this issue.

It is not only handful numbers of Muslims... There are many incident happened in the the country breaking the rules by other community people (hindu, buddist and christians and so on ).. But These RACIST MEDIA are raising their flag only toward Muslims Why you politicians and people attached to government keeping silent.

Take it to the notice of president and priminister and ask them to warn these media from targetting Muslims..while not point out the mistakes of any other people.

If these media are left with no control... they will be much more dangerous than covid-19, They already ignited racial violence against muslims in the recent past.

Being attached to the govenrment,, do a great service if you can to use your influence to controll these racist media.

While your adivce to muslims (handfull) is true and we should educate them.. This is also true to other societies...

Corrona mainly came into Srilanka from who came from Italy.. mostly they are not muslims. But we do not blame toward any other society.. It is not the time to do blaming each other.. Rather to get into action.

Hope you got the message..

A lover of Srilanka.

ஒரு சில முஸ்லிம்கள்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சில இனவாதிகள் முஸ்லிம்கள்தான் இந்த நோயை பரப்புவது போன்றும் சிங்களவன் யாவரும் யோக்கியர்கள் போன்றும் கதைகட்டுகின்றனர் . உமக்கு முதுகெலும்பு இருந்தால் இதைப்பற்றியும் சற்று வாய்திறக்கவும். எப்போது பார்த்தாலும் சிங்களவனுக்கு வால் பிடிப்பதே உமது வேலையாய் இருக்குது..

@Mohamed
What you have commented is an urgent matter which should be addressed to the Prez and the PM as well as the neutral civil societies .
Will Mr AS take a note of this serious situation or is the administrators of JM would be able to intimate to Mr AS?
Gentlemen who ever it’s please try to convey Mr Mohameds message to to the very responsible leaders of this Government .

This fellow always bleming muslims.

முஸ்லிம்கலின் ஏரியாவில் மட்டும் பாதுகாப்புப் படையினர் சுத்தினால் முஸ்லிம்லைத்தான் கைது பன்னுவார்கல்

Mr Ali Sabry, how come the so-called TVs like Hiru and Derana showing videos of the family members of the infected person in Atulugama on their TV? Is it not abusing of their human rights? Why do they only show Muslims?

Post a Comment