Header Ads



கிழக்கில் பள்ளிவாசல் தலைமைகளை ஒருங்கிணைத்து, முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க திட்டங்களை வகுக்க வேண்டும் - அதாவுல்லாஹ்


பாறுக் ஷிஹான்

கிழக்கில் அனைத்து பள்ளிவாசல் தலைமைகளை ஒருங்கிணைத்து முஸ்லிம் மக்களின் இருப்பை பாதுகாக்க திட்டங்களை வகுக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை(1) மாலை மாளிகைக்காடு பகுதியில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் 

கிழக்கின் அரசியல் தலைமைகளை உருவாக்க வேண்டும் .அத்துடன் கிழக்கிலுள்ள பள்ளிவாசல் தலைவர்களை ஒன்றிணைத்து  இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மேலும் சாய்ந்தமருது பிரதேச   தோடம்பழ உறுப்பினர்கள்  எமது தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக   இணைந்து கொண்டமை மகிழ்ச்சியளிக்கிறது.

 எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்முடன்  இணைந்து சாய்ந்தமருது பிரதேச   தோடம்பழ உறுப்பினர்கள் அரசியல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடப்போவதாக   வாக்குறுதியும் வழங்கியுள்ளனர் என கூறினார். எனவே வாக்குகளுக்கு அப்பால் மக்களுக்கு சேவையாற்றவே நாம் தேர்தலில்  இறங்கியிருக்கின்றோம். ஏனைய அரசியல் கட்சிகளை போன்று வாக்குகளுக்காக திட்டம் தீட்டி சதி செய்து செயற்ப்படுவதில்லை எனவும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு அரசியல் தலைமைகள் எவரும்  இல்லை என கூறினார். 


2 comments:

  1. எங்களுடைய வீட்டுப் பிரச்சினை எங்களுக்கு மட்டும்தான் தெரியும். எங்கள் விள்ளைகளை வைத்துத்தான் அதற்கான முடிவுகளை பரஸ்பரம் மேற் கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டார்களின் உதவியினை எமக்குத் தேவைப்படும்போது மட்டும்தான் பெறல் வேண்டும். மிரண்ட மாட்டுக்கு (bullock cow|) சூடு போடத் தேவையில்லை. கிழக்கின் பள்ளித் தலைமைகளினால் தேர்வு செய்யப்பட்ட தலைமைத்துவம் கிழக்கிற்கு மிக மிக இன்றியமையாதது. இதனை கிழக்கு முஸ்லிம்கள் தமது மனதில் ஆழமாகப் பதிவிட்டுக் கொள்ளல் வேண்டும்.

    ReplyDelete
  2. Haaa ungalukku ivangathaan saringappa.....go ahead and well done

    ReplyDelete

Powered by Blogger.