Header Ads



வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோரோ அடம் பிடிக்காதீர்கள், நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்

கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இலங்கை வருவோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் சுகாதார திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க விடுத்துள்ளார்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்க மறுப்போர் எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்கே மீண்டும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

இத்தாலி, தென் கொரியாவில் இருந்து இலங்கை வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கொரோனா தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் சோதனையின் பின்னர் பரிந்துரைக்கப்படுவோர் இந்த நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

எனினும் இந்த செயற்பாட்டுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல் ஊடக அமைச்சின் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தனா விக்ரமசிங்க இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.