Header Ads



தனியார் வைத்தியசாலைகளின் கொரோனா, சோதனைகள் நம்பகத்தன்மையற்றவை


கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் நம்பகத்தன்மையற்றவை என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொடர்பான சோதனைகள் தொடர்பில் தாம் அறியவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளன செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

எனவே கொரோனா வைரஸ் தொடர்பில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகள் 18000 முதல் 20000 ரூபா வரையிலான கட்டணங்களை அறிவிட்டு வருவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நோயாளிகளை பாதிக்கும் வகையில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.

அரசாங்கம் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரிசோதனைகள் தொடர்பில் 17 வைத்தியசாலைகளை அறிவித்துள்ளது.

இந்த வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.