March 12, 2020

அல்லாஹ்வின் படைகளில், ஒன்றா கொரோனா..?

வெறும் கண்ணுக்கே தெரியாத அற்ப உயிரினம் ஒன்று  விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும்  தொழிநுட்பத்திலும் கரை கண்டு விட்டதாக எண்ணுகிற வல்லரசுகளையும்  உலக போலீஸ் காரர்களையும் பாடாக படுத்திக்கொண்டு இருக்கின்றது. 

விண்ணுக்கு செல்லுவோம்.. 
மண்ணுக்குள் செல்லுவோம்.. 
செவ்வாய்க்கு செல்லுவோம்.. அணுகுண்டுகளை பயன்படுத்தி ஓரு நிமிடத்தில் ஓரு நாட்டையே அழிய வைப்போம்.. 

விஞ்ஞானத்தில் தொழிநுட்பத்தில் தங்களது நாடுகளை முறியடிக்க  யாருமே இல்லை என 
பெருமைத்தனமாக, கர்வமாக  பேசிக்கொண்டிருந்த 'கிரேட் ' நாடுகளின் நிலை இன்று  கவலைக்கிடமாக உள்ளன... 

கண்ணுக்கே தெரியாத அற்ப குரோனவால் அவை ஆடிப்போய் உள்ளன..
செய்வது அறியாது திகைத்துபோயுள்ளன. 

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் ஓரு இலட்சத்த்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. எந்த நாடுகளையும் அது விட்டு வைத்ததாக தெரியவில்லை. இதனால் மரணம் அடைந்தவர்களின் எண்னிக்கை 5000 தை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. 

இதனால் பல பங்குச்சந்தைகளில் பல கம்பனிகள்  பல பில்லியன்களை இழந்து விட்டு விடை தெரியாமல் தவிக்கின்றன. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு,  நாடுகளின் பொருளாதாரங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளன.பல நிறுவனங்களின் ஏற்றுமதிகள்  இறக்குமதிகள் பாதிப்படைந்துள்ளன. உல்லாசப்பயண துறை ஸ்தம்பித நிலையை கண்டுள்ளது. பல விமான கம்பெனிகள் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இதே நிலைமை நீடிக்குமானால்  அநேகமான எயார்லைன்ஸ் நிறுவனங்கள் கதவுகளை இழுத்து சாத்த வேண்டிய சூழ்நிலைக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கும். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு அரசாங்கங்களும் விடை தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றன. 

 கண்ணுக்கே  தெரியாத ஓரு அற்ப உயிரினத்தால் பெருமை கொண்டு நடக்கிற மனித இனத்துக்கு அல்லாஹு தஆலா கொடுக்கிற சோதனை இது  என்று மட்டும் தெரிகிறது...

அல்லாஹ்வின் இராணுவம் எங்கிருந்து எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது.

மழையாக.. வெயிலாக.. காற்றாக..மின்னலாக.. நீராக.. சத்தமாக.. அதிர்வாக.. நெருப்பாக.. குளிராக.. பறவைகளாக.. மிருகங்களாக.. கண்ணுக்கு காணாத உயிரினங்களாக.. அவை வந்துள்ளன.பல சமூகங்களை அவை அழித்து ஒழித்துள்ளன.

ஓரு சமூகம் தன்னை பலமான சமூகமாக எண்ணி கர்வம் கொண்டு அத்துமீறி நடக்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சோதனைகள் வந்துள்ளதை காலம் காலமாக வரலாறுகளில் கற்கிறோம். 

தம்மை மனிதர்களில் பலமானவர்கள் என்று எண்ணி பெருமை அடித்து அநியாயம் செய்து கொண்டிருந்த ஆது  சமூகம் உருவமே இல்லாத பெரும் சப்தம் கொண்ட காற்றினால்  அழிக்கப்பட்டார்கள். இறைவனின் தூதுவரை ஏற்காமல் அத்துமீறி நடந்த நூஹ் நபியின் சமூகம் வானத்தில் இருந்தும் நிலத்தில் இருந்தும் வெளிப்பட்ட நீரால் நிர்மூலமாக்கப்பட்டனர். அளவு கடந்து பெருமை அடித்த பிர்அவுனின் மக்கள் வெட்டுக்கிளிகளால், வரட்சிகளால்,   சோதிக்கப்பட்டார்கள். பெருமை அடித்த அவனும் அவனின் படையும் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டார்கள்.  பெருமை அடித்து அத்துமீறிய ஸமூது கூட்டத்தினர் பெரும் சப்தம் கொண்ட பேரிடியால்  ஒழிக்கப்பட்டார்கள்.புனித ஆலயத்தை யானைப்படையுடன் தகர்க்க வந்த ஆப்ரஹா பறவைகளாலும்,  சிறிய கற்களாலும் சப்பித்துப்பப்பட்ட வைக்கோல் போன்று ஆக்கப்பட்டான். இறைவனை மறந்து  மமதை கொண்டு திரிந்த அரசன்  நம்ரூத் அற்ப கொசுவினால் பாதிக்க வைக்கப்பட்டான். 

இப்படி அல்லாஹ்வின் படைகள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு உருவங்கள் கொண்டு அழிவுக்காக அனுப்பப்பட்டுள்ளன.. 

சரி இந்த கொரோனா வைரசுக்கு அல்லாஹ் படைத்த மனித மூளை இன்னமும் மருந்தை கண்டு பிடிக்காத நிலையில் தற்போதுள்ள தலை சிறந்த மருந்து எது...? 

அதுவும் எல்லாப்புகழும் கொண்ட அல்லாஹு தஆலா படைத்த மனித உடலேதான்.. 

ஆம்..  கொரோனா மனித உடலில் தொற்றும்போது அந்த வைரஸை தாக்கி போராட மனித உடல் அல்லாஹ்வின் அருளால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.. அதுவே இப்போதுள்ள ஒரேயொரு நம்பத்தகுந்த மருந்து.. 
ஸுப்ஹானல்லாஹ்..! மனித உடலை அற்புதமாக படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.. அல்லாஹு அக்பர்.. 


اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏ 

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.

(அல்குர்ஆன் : 2:26)

பெருமை,  கர்வம், மமதை அனைத்திலும் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம். அல்லாஹ்வை அதிகம் நினைக்கவும் மரணத்தை அதிகமும் ஞாபகப்படுத்துவோம்.  கொடிய நோய்களில் இருந்து அதனை படைத்த நம் ரப்பிடம் துஆ செய்வோம்.. 

-ராஜி -

3 கருத்துரைகள்:

This army of tiny virus has challenged humanity. All doctoral rulers in Muslim world and in non Muslim world including King, Trump, Putin and others should think twice. They should know than in front of Allah's power, they are feeble and weak human being. This virus should not alarm any Muslims... Nothing happens in this world without divine wisdom and his Plan.. So, do not worry about it.. Use this opportunity to make dawa and let the world know that Islam is nothing but a completion of all divine message....

அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது; அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.

...இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

(அல்குர்ஆன் : 16:1, 8)
www.tamililquran.com


உலக அரசியலை புரிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் கருணையாளன் எல்லா நோய்களுக்கும் விவாரணியை படைத்து விட்டான், ஆனால் ஷைத்தானின் வழியில் தஸ்ஸ்ஜலால் வழிதடத்தும் உலகை ஆளும் யாஹூ ஜூது மாஹஜூது கூட்டம் அந்த நிவாரணிகளை தாமதப்படுத்தியும் தங்களுக்கு எதிரானவர்களுக்கு ஏவியும் அட்டகாசம் செய்கிறார்கள்.
இதடக்கெல்லாம் கரணம் முஸ்லிம்கள் தங்களின் முக்கிய நபி இன் பணியை வெட்டுவிட்டு, பல கூட்டமாக பிரிந்தேதே ஆகும்.

Post a Comment