Header Ads



பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது, பயப்பட தேவையில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்

நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படாது எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, அதனால் அளவுக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

எமது நாட்டினுள் தற்போது பரவியுள்ள வைரஸ் கொரனா தொற்று நோயின் நிமித்தம் மக்கள் பயமடைந்து பொதுமக்கள் பெருமளவில் வியாபார நிலையங்களில் உணவு பொருட்களை சேமிப்பதில் ஈடுபட்டு வருவதாக எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.

வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை எதிர்வரும் காலங்களில் நிலவ விருப்பதாக போலியான வதந்திகளை பரப்பியமையினால் பெரும்பாலான பொதுமக்கள் வியாபார நிலையங்களுக்கு சென்று உணவு பொருட்களை மொத்தமாக பெற்று தங்களது வீடுகளில் சேகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது. ஆகையால் அப்படியான பற்றாக்குறை நிலைமை எமது நாட்டினுள் நிலவ வில்லை அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.

இலங்கையின் தயார்நிலை, தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை, தடுப்பு நடவடிக்கைகள் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளுக்கான முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் எமது நாட்டினுள் இருவர் இந்த வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளமையால் அனைவரும் இந்த தொற்று நோய்களுக்கு உள்ளாகுவீர்கள் என்று பயப்பட தேவையில்லையென்று கோத்தாபய ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தினார் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.

சமூக வலயங்களின் மூலம் வெளியிடப்படும் தவறான வதந்திகளை நம்பி பொதுமக்களாகிய நீங்கள் ஏமாந்து போகாதீர்கள் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை பணிகளில் பாதுகாப்பு படையினர் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு படையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான தகவல்களை மற்றும் பொதுமக்களாகிய நீங்கள் நம்பி பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. Economic minister suppose to say this statement but unfortunately Army chief giving this statement in Sri lanka. First they should be educated own rule.

    ReplyDelete

Powered by Blogger.