Header Ads



முஸ்லிம் சமூகத்தின் குசும்பர்களே, நீங்கள் தறிகெட்டு விமர்சிக்க முஸ்லிம்கள் நாகரீகம் தெரியாதவர்கள் அல்ல

- அபூ ஸைனப் - 

"முஸ்லிம்களின் நடத்தை சரியில்லை", "முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பதில்லை", போன்ற குற்றச்சாட்டுக்களை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இத்தகைய குற்றச் சாட்டுகளை முன்வைப்பவர்கள் அதிகமானவர்கள் முஸ்லிம் நேர்மைக் குசும்பர்களாவர். 

குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மைத் தன்மை இல்லாமலும் இல்லை, இருப்பினும் குறித்த குற்றச்சாட்டில் நேர்மைத் தன்மை குறைவு என்பது எமது வாதமாகும். 

முஸ்லிம்கள் இலங்கையில் மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரிய கலாச்சாரத்திற்குச் சொந்தக்காரர்கள், மிக உயர்ந்த பதவிகளில் நாட்டை அலங்கரித்த தேசப்பற்றாளர்கள். அந்த வம்சாவளியில் வந்த எம்மை ஒன்றும் தெரியாத பத்தாம் பசலைகள் போன்று சித்தரிப்பது அடிப்படையற்ற ஒரு வாதமாகும். 

கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் உலகளாவிய ரீதியில் இன ரீதியான ஒடுக்கங்களை சந்தித்து வருகிறார்கள். இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இத்தகைய ஒடுக்குமுறைக்குச் சிறந்த உதாரணமாகும். ஆகவே, இது முஸ்லிம்களுக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரலின் அரங்கேற்றங்களாகும். 

இதன் அடிப்படையில்தான் முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படிப் பார்த்தால் வடமாகாணத்தில் மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற ஒன்றுகூடல் மற்றுமொரு சகோதர சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகும். அதனை சமயம் சார்ந்து யாரும் பெரிது படுத்தவில்லை. நாகரிகம் அடைந்த சமூகம் அப்படி சமயம் சார்ந்து விமர்சிப்பதும் இல்லை. இத்தகைய அசாதாரண நிகழ்ச்சிகள் எல்லா சமூகத்திலும் விதிவிலக்காக இடம்பெறத்தான் செய்கின்றன. அதற்கு முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கல்ல. 

பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்பட்டு, ஜும்மா பிரசங்கங்கள் கைவிடப்பட்டு, ஊரடங்கு வேளைகளில் வீடுகளுக்குள் முடங்கி முஸ்லிம்கள் கணிசமான ஒத்துழைப்பினை வழங்கித்தான் வருகிறார்கள். தறிகெட்டு விமர்சிக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் நாகரீகம் தெரியாதவர்கள் அல்லர். 

அப்படி இருக்கையில், முஸ்லிம் சமூகத்தின் நேர்மைக் குசும்பர்கள் தம்மை மேதாவிகளாகவும் நடு நிலையாளர்களாகவும் காட்டிக் கொள்ள சொந்த சமூகத்தைக் காவு கொடுக்க முற்படுவது மிக மன வேதனையான விடயமாகும். எனவே, முஸ்லிம்களிடத்தில் இருக்கும் தவறுகளை நமக்குள் அறிவுரை கூறித் திருத்த முற்படுவோம். நமது சமூகத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் இறைவனைப் பிரார்த்திப்போம். இறைவன் நமக்குப் போதுமானவன்.

அன்றியும், முஸ்லிம்களை இன ரீதியாக நசுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு சோரம் போகும் நேர்மைக் குசும்பினைக் கைவிடுவோம். சமூகத்தை உண்மையாக நேசித்து உளப்பூர்வமாகத் திருத்த முற்படுவோம். அதுவே நாம் சமூகத்திற்குச் செய்யும் கைமாறாகும். 

18 comments:

  1. உண்மையான பதிவு..எதற்கெடுத்தாலும் சமூகத்தை பழிக்கும் கழிசடைகளுக்கு உறைக்கட்டும்

    ReplyDelete
  2. April மாதம் குடித்து விட்டு வாகனம் ஒட்டி பிடிபடுப வர்கள் எல்லோரும் முஸ்லிம் களா?

    ReplyDelete
  3. அருமையான செருப்படி கட்டுரை. இதில் என்ன வேடிக்கையென்றால் இந்த தலத்தில் ஒரு சைக்கோ வருவான் அவன் முஸ்லிம்கள் பற்றிய விமர்சனங்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல வருவான். இவர்களுடைய நோக்கம் ஏதோ ஒருவகையில் அற்பமான விளம்பரம் தான்.

    ReplyDelete
  4. http://www.jaffnamuslim.com/2020/03/17.html?m=1

    ReplyDelete
  5. 100/% agree with you.well said

    ReplyDelete
  6. ஒழுக்கத்தை சிறார்கள் இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கு ஒவ்வொரு மஹலாக்களிலும் முயற்சி எடுக்க வேண்டும். நான் வசிக்கும் மஹலாவில் சிறுவர்களையும் வாலிபர்களையும் வெள்ளிக்இகிழமை ஜூம்மாநேரத்தில் ஓர் இடத்தில் அமர செய்கிறார்கள்.அவரகளும் குத்பா கேட்பதில்லை அடுத்தவர்களையும் கேட்கவிடாமல் ஒரே கூடியிருந்து எல்லோரும் கதை சிலர் கையடக்க தொலைபேசியை கொண்டு வந்து அதில் game விளையாடுகிறார்கள்.எல்லா இனத்திலும் குறைகள் இல்லாமல் இல்லை.ஆனால் நாம் முஸ்லிம்கள் அடுத்தவருக்கு முன்மாதிரியாக இருக்க தெரிந்திருக்க வேண்டும்.இங்கும் மேலே ஒருவர் துஷனம் பேசியுள்ளார்.இதையெல்லாம் அவரவர் சுதந்திரமென பிரசூரிக்க முடியாது.நாமும் பத்திரிகை சுதந்திரம் என்று இருந்து விட முடியாது.

    ReplyDelete
  7. if acju ordered for you , please follows, what happened in jaffna in areyala churuch (father shared china virus for 110 peoples)

    ReplyDelete
  8. ஊரடங்கு உத்தரவு மீறியதாக அதிகமாக கைதுகள் இடம் பெற்றுள்ள மாவட்டம் கம்பஹா. இங்கு முஸ்லிம்களா அதிகமாக வாழ்கிறார்கள்? நாட்டுப்புற வீதிகளில் அதிகமாக சிங்கள சகோதரர்கள் நடமாடுகிறார்கள் ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  9. சக்கிலி நாய்கள் தன் இனத்தையே வெறுத்து ஒதுக்கும் குணம் கொண்டது. ஒரு சாப்பாட்டை வீசினால், முதலில் ஒரு நாய் வந்து தின்னும், பிறகு ஒரு ஒரு பூனை வந்து தின்னும், சும்மா இருக்கும், ஒரு காகம் வந்து தின்னும், அப்பவும் சும்மா இருக்கும், ஆனால் இன்னுமொரு நாய் தின்ன வந்தால், பயங்கரமாக அந்த நாயோடு சண்டை போட்டு, தின்ன விடாமல் விரட்டியே விடும்.

    ReplyDelete
  10. எல்லா மதத்தை சேர்ந்தவர்கலும் அனைத்து விதி முறைகளையும் மீருகின்ரனர்.ஆனால் குற்றம் மட்டும் எம்மீது சுமத்தக் காரணம்,எம்மவர்கல் அதிகமாக இருப்பது.அது போல் இன்னக்கி ஹொரபொத்தானையில் பள்ளியில் 50 பேருக்கு அதிகமாக இருந்திருக்கிறார்கள்.ஆனால் அடுத்த மதத்தினர் யாரும் தங்கள் வழிபாட்டுத்தலங்களினை இவ்வாறான சூழ் நிலையில் பயன்படுத்தவில்லை,ஆனால் எமது ஆட்கள் மட்டும் ஏன் இவ்வாறான தவறுகளை செய்து,இனவாதிகலின் வாய்க்கு மெல்ல அவல் கொடுப்பது.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்ககும்
    உலகத்துக்ககே நாகரீகத்தை கற்று கொடுத்த எமக்கு நீன்ற வறலாறே இறுக்கிறது."நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனே" சொல்லுகின்றான் அவன் படைத்த படைப்புகளிள் மிகவும் மேலான படைப்பு மணிதர்கள் அதிழும் சிறந்த மேலானவர்கள் அவன் ஒருவனை மட்டும் ஈமான் கொண்டு சிலை வணக்கம் செய்யாத முஸ்லீம்கள்.ஆகவே அன்பான சகோதரர்களே! சும்மா எடுத்தததுக்கெல்லாம் உங்கள் சகோதரர்களின் குறைகளை சொல்லி சகோதரனின் மாமிசத்தை தின்னவேண்டாம்.

    ReplyDelete
  12. எல்லா நாடுகளிலும் கணிசமானவர்கள் கொரோனா சமூக இடைவெளி பராமரிப்பை மீறுகிறார்கள். இலங்கை போன்ற இன்வாத நாடுகளில் மட்டும் நாம் செய்தால் இலங்கையர் அடுத்தவன் செய்தால் தமிழன் அல்லது முஸ்லிமென இனச்சாயம் பூசப்படுகிறது. விமர்சனம் சரி. இன்ரீதியாக அடையாளப்படுத்தல் தப்பு.

    ReplyDelete
  13. முஸ்லிம்கள் இலங்கையில் மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரிய கலாச்சாரத்திற்குச் சொந்தக்காரர்கள், தேசப்பற்றாளர்கள். அந்த வம்சாவளியில் வந்த எம்மை ஒன்றும் தெரியாத பத்தாம் பசலைகள் போன்று சித்தரிப்பது அடிப்படையற்ற ஒரு வாதமாகும். ////

    பள்ளிவாசல் .பொலிசார் முற்றுகையிடுகிறார்கள் என அறிந்ததும், அங்கிருந்து 50 க்கும் மேற்பட்டவர்கள் தப்பியோடியுள்ளனர்முஸ்லிம்கள் நாகரீகம் தெரியாதவர்கள் அல்ல

    [ தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமையும், வீடுகளிலேயே தொழுது கொள்ளும்படி ஜம்மியத்துல் உலமா ஏற்கனவே அறிவுறுத்தல் விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.]

    ReplyDelete
  14. jeyabalan iya ur comments oru pothuvanathu and

    ReplyDelete

Powered by Blogger.