Header Ads



நாட்டின் சட்டங்களை மதித்து நடக்காவிட்டால் அவர்கள், பள்ளிவாசல் நிருவாகிகளாக இருக்க தகுதியற்றோர்


யாரேனும் இந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடக்காவிட்டால், அவர்கள் வக்ப் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களின் நிருவாகிகளாக இருக்க தகுதியற்றோர்.,

#வக்ப் சபையின் தீர்மானம் மீறப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளரின் செய்தி.#.                                 வக்ப் சபை கடந்த 2020.03.15 ஆம் திகதி ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. 

அது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மறு அறிவித்தல் வரை பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆத் தொழுகைகள் என்பவற்றை நடத்த வேண்டாம் என்பதாகும்.

இதை ஏற்று எல்லாப் பள்ளிவாசல்களும் தொழுகைகளை இடைநிறுத்தியுள்ளார்கள்.

துரதிஸ்டவசமாக அதனை  மீறி ஹொரவப்பொத்தானை கிவுலுகட ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் 2020.03.27 ஆம் திகதி  ஜும்ஆ தொழுகைக்காக ஒன்று கூடியதை பொலீசார் அறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அந்த அடிப்படையில் அந்த பள்ளிவாசலின் நிருவாகிகளை வக்ப் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களைக் கொண்டு வக்ப் சபை இடைநிறுத்தியுள்ளது. 

அதற்குப் பதிலாக விஷேட நம்பிக்கையாளரை நியமனம் செய்துள்ளது.

அந்த நியமனம் இன்று (2020.03.28) வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெளிவான ஒரு செய்தியை நாட்டிலுள்ள அனைத்து பள்ளவாசல்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்

யாரேனும் இந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடக்காவிட்டால் அவர்கள் வக்ப் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களின் நிருவாகிகளாக இருக்க தகுதியற்றோர் என்பதே அந்த செய்தியாகும்.

ஏபிஎம் அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டி வுல்கள் திணைக்களம்

2 comments:

  1. பணிப்பாளராக நான் இருந்திருப்பேன் என்றால் எதிர்காலத்தில் சகலரும் அரச கட்டுப்பாடுகள், விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களை பினபற்றி ஒழுகும்விதத்தில் உடல்ரீதியான தண்டனைகளை அவரகளுக்கு வழங்கியிருப்பேன்.

    ReplyDelete
  2. Excellent. As the citizens of this land, we must abide by the laws of the country at all times. We have had enough trouble in the past. We have to be vigilant and take decisive measures at times.

    ReplyDelete

Powered by Blogger.