Header Ads



சுவிஸ் குடிமக்களுக்கு ஆல்ப்ஸ் மலையிலிருந்து, வரும் நம்பிக்கையூட்டும் செய்தி


தினமும் சுவிஸ் மக்களுக்கு ஆல்ப்ஸ் மலை நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்றை வழங்கி வருகிறது.

இந்த வாரம் ஒவ்வொரு மாலைப்பொழுதும், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள Matterhorn மலையில் நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியும் ஒரு அறிவுரையும் மாறி மாறி ஒளிர்கின்றன.

ஒரு செய்தி, வீட்டிற்குள்ளேயே இருங்கள் என அறிவுறுத்த, மற்றொரு செய்தியோ, இந்த கொரோனாவைக் கண்டு மனம் தளரவேண்டாம் என நம்பிக்கையூட்டுகிறது.

ஆம், ஒரு மாலைப்பொழுதில் Matterhorn மலையில் ‘Stay at Home’ என்ற வார்த்தைகள் ஒளிர்ந்ததானால், மறு நாள் மாலை ’Hope’ என்ற வார்த்தை ஒளிர்கிறது.

இரண்டாவது செய்தி மக்களுக்கு மிகவும் அவசியம்தான், காரணம், சுவிட்சர்லாந்தில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டிவிட்டது.

200க்கு அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டார்கள். நான்கு வாரங்களாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு முதியவர்களுக்கு விதிக்கப்பட்டு மூன்று வாரங்களாகிறது.

சுவிட்சர்லாந்து ஒரு பணக்கார நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லைதான்... ஆனால், 150,000 நிறுவனங்கள் தற்போது குறைந்த பணியாளர்களுடன் குறைந்த நேரமே பணியாற்றிவருகின்றன.

அரசு 42 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தாலும், அது போதாது என அரசே தெரிவித்துள்ளதையடுத்து பணக்கார நாடானாலும் அதுவும் தடுமாறுவது தெரிகிறது.

No comments

Powered by Blogger.