Header Ads



கொரோனா வைரஸ், உலகளாவிய உயிரியல் தாக்குதலின் ஒத்திகை - விளாடீமிர் புட்டினின் ஆலோசகர்

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலான உயிரியல் தாக்குதலின் ஒத்திகை என ரஷ்ய மருத்துவச் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதி விளாடீமிர் புட்டினின் ஆலோசகருமான மருத்துவர் லியோனீட் ரோஷல் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஊடகங்களுக்கு மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கோவிட் - 19 உலகளாவிய உயிரியல் தாக்குதலின் ஒத்திகை. இந்த வைரஸ் தொற்றை அடுத்த மூன்று மாதங்களுக்குள் கட்டுப்படுத்தி விடலாம்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இப்படியான உயிரியல் தாக்குதலை எதிர்கொள்ள சுகாதாரம் மற்றும் இடர் முகாமைத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இந்த உயிரியல் தாக்குதல் ஒத்துகையின் பின்னால் இருக்கும் நாட்டுக்கு எதிராக உலகில் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து குறைந்தபட்சம் அவற்றின் இழப்புகளுக்கான நட்டஈட்டைக் கோர ஒன்றிணைய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.