தனியார் துறையினருக்கு 3000 சம்பளம் உயர்வு
தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளமாக இருந்த 17,500 ரூபாவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அந்த தொகை 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சர் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அரச துறையினருக்கான சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டது. தனியார் துறையினரின் அடிப்படை சம்பளத்தை 30,000 ரூபாய் வரையில் அதிகரிக்க கலந்துரையாடினோம்.
இதன்படி, 27,000 ரூபாய் குறைந்த பட்ச சம்பளமாக ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும் வகையிலும், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அதனை 30,000 ரூபாய் வரையில் அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Post a Comment