Header Ads



வதந்தி பரப்பி, ஊரடங்கை மீறுவோர் மீது ACJU தலையிடப் போவதில்லை - மௌலவி ஆதம்பாவா

- பாறுக் ஷிஹான் -

வதந்திகளைப் பரப்புபவர்கள் மீதும் ஊரடங்கு விதிகளை மீறுகின்றவர்கள் மீதும் பாதுகாப்புத்தரப்பினர் எடுக்கும் எந்தத் தீர்மானங்களில் அகில இலங்கை உலமா சபையோ அம்பாறை மாவட்ட உலமா சபையோ தலையிடப் போவதில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவருமான எஸ்.எச்.ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

நாங்கள் எதிர்பார்ப்பது பொதுமக்கள் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாகும். பொது மக்கள் ஊரடங்கு வேலையில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் போது அதற்கான பொறிமுறைகளுகக் கூடாகவே  வழங்குங்கள்.உங்களுக்கு எதும் பிரச்சினைகள் ஏற்படுமானால் பொலிசார் மூலம் சட்ட ரீதியாக அணுகுங்கள் .ஆனால் தற்போது எமது பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வதந்திகளை பரப்பி குளிர்காய சிலர் முயல்கின்றனர்.எனவே அதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.