Header Ads



மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் 9 ஆவது கலாசார, பண்பாட்டு கண்காட்சி

வருடாந்தம் எமது பல்கலைக்கழகத்தின் உதவியோடு பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் "Students Cultural Festival" (مهرجان الثقافات والشعوب) கலாசார, பண்பாட்டு கண்காட்சி வழமை போன்று இவ்வருடமும் இறைவனின் உதவியோடு சென்ற வாரம் இடம்பெற்றது. #இன் ஷாஅல்லாஹ். இக் கண்காட்சியில் 104 நாடுகளைச்  சேர்ந்த  மாணவர்கள் தங்களது நாடுகளில் இருக்கக்கூடிய கலாசார, பண்பாட்டு விழுமியங்களான ஆடைகள், சிற்றுண்டி உணவுகள், குடி பானங்கள், பிரபல்யமான இடங்கள், மற்றும் தங்களது நாட்டிற்கு மாத்திரம் குறிப்பான அம்சங்கள் போன்றவைகளை காட்சிப்படுத்தவார்கள். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக அமையும். 

. எந்த நாட்டு மாணவர்கள்  தங்களது நாட்டின் கலாசார விழுமியங்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி அதிகமான பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்களது நாடுகளே இவ்வருடம் வெற்றி பெற்ற நாடுகளாக 1,2,3 என்ற தர வரிசையில் அறிவிக்கப்படும்.
 தற்ப்போது  இறுதுக்கட்ட  நிகழ்வாக வாக்களிப்பு  டுவிட்டர் ஊடாக இடம்பெறுகிறது
.  
பங்கு பற்றிய நாடுகளில் மிகச் சிறந்த நாட்டை தெரிவு செய்வதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு  Twitter ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. உங்கள் வாக்கை இலங்கை நாட்டுக்காக வழங்கி எங்கள் நாட்டை வெற்றி பெறச்செய்வோம்.


எமது பல்கலைக்கழகத்தில் இதுவரை இடம்பெற்றுள்ள கலாசார, பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் 8 நிகழ்வுகளில் ஒரு முறை எமது நாடு இரண்டாம் இடத்தை பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

தற்போது 

(மேலே குறிப்பிடப்பட்டது போன்று உங்களுடைய ஆதரவை வழங்குவதற்கு நீங்கள் சவூதியில் வசிப்பவராக இருக்க வேண்டுமோ அல்லது எமது கண்காட்சியை தரிசிக்க வேண்டுமோ போன்ற எந்த நிபந்தனையும் கிடையாது, நீங்கள் எங்கிருப்பினும் உங்களது பெருமதியான வாக்குகளை  எமக்கு வழங்கலாம்) 

#இலங்கை_மாணவர்_ஒன்றியம்

No comments

Powered by Blogger.