March 19, 2020

கொரோனா: நினைவில் வைத்து க்கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் பரவியிருப்பதால், தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீங்கள் எடுக்கும்போது, ஒருவரை விட்டு விலகியிருப்பது என்பது காலத்தின் தேவையாகும். இவை தடுப்பு நடவடிக்கைகளாக முக்கியமானவை என்றாலும், வீட்டில் அடைபட்டிருப்பது சிலருக்குச் சமாளிக்க எளிதானதாக இருப்பதில்லை. ஊர்சுற்றாமல், இரவு நேர பார்ட்டிகள் இல்லாமல், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இல்லாமல், மேலும் முக்கியமாக வீட்டில் வேலை மற்றும் குழந்தைகள் இரண்டையும் கையாளும் போது சினிமாக்களுக்கு செல்லும் வாய்ப்பு இல்லை. இந்த ஊரடங்கு உத்தரவு போன்ற சூழ்நிலை உலகளாவிய சுகாதார நெருக்கடி காரணமாகப் பலருக்கு புதிய விஷயமாக இருக்கும். மேலும், மிக மோசமான சூழ்நிலையில் மக்கள் இருப்பதால் மிகவும் பதற்றம் நிலவுகிறது.

இந்த கடினமான சூழ்நிலையில், நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் இதோ:

1. பதற்றமடைய வேண்டாம்

“எச்சரிக்கை மற்றும் பதற்றத்துக்கு இடையில் ஒரு கோடு உள்ளது, நாம் எப்போதும் கடக்கக்கூடாது. சமூக ஊடகங்களில் நாம் படித்து ஃபார்வோட் செய்யும் தகவல்களை உண்மைகளைச் சரிபார்த்து கவனத்தில் கொள்வது முக்கியம். துன்ப காலங்களில் வலிமை மற்றும் நேர்மறை கதைகளையும் ஊக்குவிக்கவும்,” என்று டாக்டர் சமீர் பரிக் கூறினார். 

2. உண்மைகளைச் சரிபார்க்கவும்

உண்மையை விடப் பதற்றம் ஒரு பெரிய அச்சுறுத்தலாகும், எனவே நம்பகமான தகவல்களின் ஆதாரங்களுடன் ஒட்டிக்கொண்டு, நீங்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1-2 முறை செய்திகளை எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்.

3. சமூக வலைதளங்கள் மூலம் இணைந்திருங்கள்

சமூக ஊடகங்களிலிருந்து விலகியிருந்து மனநிலையைக் கெடுக்க விடாதீர்கள். இது வாழ்க்கையின் இன்னொரு கட்டம் என்றும், மக்கள் இந்த தருணத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சில "மீ-டைம்" அனுபவிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“உடல் ரீதியான தூரத்தை ஊக்குவித்தாலும், அன்பானவர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பது முக்கியம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்கள், செல்போன்கள் மற்றும் வீடியோ அழைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்” என்று டாக்டர் சமீர் பரிக் கூறினார்.

4. வழக்கமான பழக்கத்தை கடைப்பிடிக்கவும்

வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்பவர்கள், அவர்கள் ஒரு வழக்கமான பழக்கத்தைத் தொடர வேண்டும். வழக்கமான தூக்கம்-விழித்திருக்கும் முறை, சீரான உணவு மற்றும் உடல் உடற்பயிற்சி ஆகியவற்றைச் சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

5. என்ன செய்ய வேண்டுமென்பதைப் பட்டியலிடுங்கள்

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய விரும்பும் பணிகளின் பட்டியலை உருவாக்கி, வேலை செய்ய ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்வதன் மூலம் வேலை-வாழ்க்கை எல்லைகளைச் சரியான பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் நேரத்தில், படிப்பது, கிட்டார் வாசிக்க கற்றுக்கொள்வது, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது போன்றவற்றைச் செய்யுங்கள்.

6. உங்களுக்கான நேரத்தைச் செலவிடுங்கள்

உங்களுக்கான நேரத்தைச் செலவு செய்ய இது ஒரு காரணமாக இருக்கட்டும். பாடல்களைக் கேளுங்கள், படம் பாருங்கள் அல்லது புத்தகம் படியுங்கள்; இந்த நேரத்தில் உங்களுக்குப் பிடித்த சில விஷயங்களையும் செய்யுங்கள்.

நாட்டில் கோவிட் -19 அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் சொந்த உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் குறித்து அக்கறை கொள்வது இயற்கையானது. உந்துதலுடனும் மற்றும் பதற்றமடையாமலும் இருப்பது முக்கியம்.

0 கருத்துரைகள்:

Post a comment