Header Ads



இத்தாலி நடுங்குகிறது 24 மணித்தியாலத்தில் 49 பேர் பலி - உயிரிழந்தவர் எண்ணிக்கை 197

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் 24 மணிநேரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் 4,600 க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்து ஆண்டு டிசம்பரில் தோன்றிய கொரோானா வைரஸினால் சீனாவிற்கு வெளியே அதிக இறப்புகள் பதிவாகியுள்ளதாக பல நாடுகள் இப்போது தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

இந்நிலையில், உலகளவில் கிட்டத்தட்ட 101,400 பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு , 3,491 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,070 ஆக உள்ளது, அவற்றில் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன. அத்துடன், நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 80,651 ஆக உள்ளது. 

சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே, இன்று காலை நிலவரப்படி 421 பேர் உயிரிழந்துள்ளனர்:

இத்தாலி: 197 இறப்புகள்

ஈரான்: 124

தென் கொரியா: 44

அமெரிக்கா: 15

ஜப்பான்: 12

பிரான்ஸ்: 9

ஸ்பெயின்: 8

ஹொங்கொங், ஈராக் மற்றும் அவுஸ்திரேலியா: தலா 2 இறப்புகள்

தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தலா ஒரு  இறப்பு வீதம் வரை பதிவாகின்றமையும் குறிப்பிடதக்கது. 

1 comment:

  1. அல்லாஹ்வின் தண்டனை.மனிதனின் அத்துமீறிய பாவங்கலுக்காக

    ReplyDelete

Powered by Blogger.