Header Ads



ஈரானிய எம்.பி.க்கள் 23 பேருக்கு கொரோனா வைரஸ்

ஈரானிய எம்.பி.க்கள் 23 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் அப்தோல்ரேஸா மெஸ்ரி தெரிவித்தார்

எனினும், பாதிக்கப்பட்ட எம்.எஸ்.பி.க்களின் பெயரை மெஸ்ரி குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் வைரஸ் காரணமாக ஒரு மூத்த நீதித்துறை அதிகாரி இறந்ததாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதித்துறையின் தலைவரான இப்ராஹிம் ரைசியின் ஆலோசகரான அஹ்மத் டாய்சர்கானி கொரோனா வைரஸால் இறந்துவிட்டார் என்று ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டில் 77 பேர் வைரஸால் இறந்துள்ளனர், மேலும் 2,336 நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மூத்த ஈரானிய அரசியல்வாதியும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீப்பின் முன்னாள் ஆலோசகருமான ஹொசைன் ஷேக்கோலெஸ்லாம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.