Header Ads



கொரோனாவுக்கு சுவிட்சர்லாந்தில் 13 பேர் பலி, 1375 பேர் பாதிப்பு - உதவுதற்கு இராணுவம் தயார்

சுவிட்சர்லாந்து அரசு கொரோனா வைரசிற்கு எதிராக போராடி வரும் நிலையில், உதவுதற்கு இராணுவம் தயாராக இருப்பதாக அந்நாட்டின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சுவிட்சர்லாந்தில் 1375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டில் பள்ளிகள், பல்கலைக்கழங்கங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நாட்டில் மக்கள் பலர் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் உதவுவதற்கு இராணுவம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை தங்களுடைய நான்கு இராணுவ மருத்து குழுவில்(இராணுவ மருத்துவர்கள்), ஒன்றை அனுப்பவுள்ளதாக, இராணுவ தலைவர் தாமஸ் சுஸ்லி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் நம் மக்களின், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான சிறப்பு சேவையை மேற்கொள்வார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் அதன் சேவைகள் என்ன என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.

மேலும் இராணுவ செய்தி தொடர்பாளர் Daniel Reist , நாடு முழுவதிலும் இருக்கும் மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு 500 பேர் முதல் 600 பேர் வரை கூட கோரப்பட்டால்,உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் இதுவரை எந்த ஒரு கோரிக்கையும் வரவில்லை என்று கூறினார்.

மேலும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் எல்லையான சுவிட்சர்லாந்தின் தெற்கு Ticino பிராந்தியத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு ஆதரவாக இராணுவம் ஏற்கனவே 23 பேரை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.