Header Ads



மருத்துவ பரிசோதனை செய்யாத 1000 பேரை கண்டுபிடிக்கவே ஊடரங்குச் சட்டம்

இலங்கையின் சில பகுதிகளில் இன்று -18- மாலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் பல இடங்களிலும், நீர்கொழும்பு கொச்சிக்கடையிலும் இன்று 4.30 முதல் மறு அறிவித்தல்வரையில் பொலிஸ் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலி, தென் கொரியா உட்பட சில நாடுகளில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எந்தவித மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் இந்தப் பகுதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு வார காலத்திற்குள் 45 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.